நாடு முழுவதும் 3 நாள் துக்கம்
டெல்லி:
துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்தின் மறைவையொட்டி நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அவரது உடல் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்து அறிந்தவுடன் முதலில்துணைப் பிரதமர் அத்வானி விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
பின்னர் அவரது உடல் மெளலானா ஆசாத் சாலையில் உள்ள துணை ஜனாதிபதியின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குபொது மக்கள் அஞ்சலிக்காக இன்று முழுவதும் வைக்கப்பட்டிருக்கும்.
நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் அவரது உடல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது இறுதிச் சடங்குகள் நாளைடெல்லியில் நடக்கும் என்று தெரிகிறது. முழு அரசு, ராணுவ மரியாதையுடன் அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு தகனம்செய்யப்படும்.
துணை ஜனாதிபதியின் மறைவையடுத்து இன்று மத்திய அமைச்சரவை பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் அவசரமாகக் கூடுகிறது. அவரதுமறைவுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு 3 நாள் துக்கம் குறித்து இதில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்படும்.
அவரது மறைவை அறிவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கருப்பு பார்டர் கொண்ட அரசாணையைப் பிறப்பித்தது. இது மிக முக்கியத்தலைவர்களுக்கு மட்டுமே செய்யப்படும் மரியாதை ஆகும். நாடு முழுவதும் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும்என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications