அரசியலில் கிரிமினல்களை எதிர்த்த காந்த்
டெல்லி:
பஞ்சாப் மாநிலத்தில் அமிரிஸ்தர் மாவட்டத்தில் கோட் முகம்மத்கான் என்ற சிறிய கிராமத்தில் 1927ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதிகிராமத்தில் பிறந்தவர் கிருஷ்ண காந்த். தன்னுடைய உழைப்பினால் துணை ஜனாதிபதி பதவியை எட்டிப் பிடித்தார்.
தீவிரமாத சோஷலிசவாதியான இவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவரது குடும்பமே தீவிரமான சுதந்திரப் போராட்டத்தில்ஈடுபட்டது.
1942ம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசியலில் காலடிஎடுத்து வைத்தவர். வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் எம்.எஸ்சி. பட்டம் பெற்ற இவர் மத்திய தொழில்துறை ஆராய்ச்சிக்கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றினார். ஆனால், சிறிது காலத்தில் அந்தப் பணியை விட்டுவிட்டு காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.
ஒரு காலத்தில் இந்திரா காந்தியை தீவிரமாக ஆதரித்த இவர் பின்னாலில் அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். இந்திராவை எதிர்த்துபோராட்டம் நடத்திய காங்கிரஸ் இளம் துருக்கியர்கள் என்று அழைக்கப்பட்ட 4 பேரில் கிருஷ்ணகாந்தும் ஒருவர். எமெர்ஜென்சியின்போதுநள்ளிரவில் கைது செய்யப்பட்டார். காங்கிரசைவிட்டும் நீக்கப்பட்டார்.
ஜனதா கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர் இவர். முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் நெருங்கிய நண்பர் இவர்.1989ம் ஆண்டில் வி.பி. பிரதமரானபோது அவரிடம் பேசி கிருஷ்ணகாந்தை ஆந்திர மாநில கவர்னாக்கினார் சந்திரசேகர். அப்போதுமுதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நட்பைப் பெற்றார். இதையடுத்து நாயுடுவின் ஆதரவை மத்திய பா.ஜ.க. அரசு கோரியபோதுகிருஷ்ணகாந்தை துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார் நாயுடு.
இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர் கிருஷ்ணகாந்த். மிகுந்த தேசப்பற்றாளர்.
1966ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டுவரை ராஜ்யசபா, லோக்சபா உறுப்பினராக மாறி மாறி இருந்தார்.
உருது மொழியில் மிகச் சிறந்த கவிதைகள் எழுதியுள்ளார். அரசியலிலும் தேர்தலிலும் பண பலம் கொண்டவர்கள், கிரிமினல்களின்ஆதிகத்ததை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்.
இவரது மனைவி சுமன் காந்தும் திவிர சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
கிருஷ்ணகாந்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் 20ம் தேதி முடிவடைய இருந்தது. பதவியில் இருக்கும்போது இறந்த முதல் துணை ஜனாதிபதிஇவர் தான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications