ரயில் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர்: ஜெ. திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி குறித்து விவாதிக்க மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை கூட்டியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை நடக்கும் இந்தக் கூட்டத்தில் சென்னை தவிர்த்த 27 மாவட்ட கலெக்டர்களும் கலந்துகொள்கின்றனர்.

இது குறித்து முதல்ர் ஜெயலலிதா இன்று நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளோம். வறட்சிநிலைமையைச் சமாளிக்க மத்திய அரசிடம் ரூ. 300 கோடி நிதியுதவியையும் 1 லட்சம் டன் அரிசியையும் கோரியுள்ளோம்.

ரயில்கள் மூலம் பிற மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மத்திய அரசிடம் குறைந்தகட்டணத்தில் சரக்கு ரயில் வாகன்களைக் கோரியுள்ளோம்.

மதிமுக அமைச்சர் கண்ணப்பன் கூறுவது போல வறட்சி நிலையை அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தேவையானநடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்திய அமைச்சராக இருந்து கொண்டு இதுபோல பொறுப்பில்லாமல் பேசுவதுஅவருக்கு அழகல்ல.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வறட்சி நிலவரம் குறித்து நேரில் கேட்டறிய மாவட்டக் கலெக்டர்கள் கூட்டத்தை நாளை கூட்டியுள்ளேன்.கலெக்டர்கள் தரும் விவரங்களை வைத்து மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோருவது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த ஆண்டு தமிழகத்துக்கு இயற்கைச் சீற்ற நிவாரண நிதியாக ரூ. 113.86 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் ரூ. 55.9 கோடியைஏற்கனவே வறட்சி நிவாரணத்துக்காக செலவிட்டுவிட்டோம் என்றார் ஜெயலலிதா.

பாண்டிச்சேரியிலும் வறட்சி:

பாண்டிச்சேரியையும் கடும் வறட்சி வாட்டி வருகிறது. நிமைையை சமாளிக்க மத்திய அரசின் உதவியைக் கோர முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அம் மாநில விவசாயத்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் இன்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+