மருத்துவமனையிலிருந்து "டிஸ்சார்ஜ்" ஆனார் மாறன்
டெல்லி:
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருதய வால்வு மாற்று அறுவைச் சிசிச்சைசெய்யப்பட்ட மத்திய அமைச்சரும் திமுக தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறன் இன்று சிகிச்சை முடிந்துவீடு திரும்பினார்.
கடந்த வாரம் நெஞ்சு வலி காரணமாக கடந்த 16ம் தேதி அவர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு கடந்த 22ம் தேதி இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.டாக்டர்கள் வேணுகோபால், தல்வார் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை செய்தது.
அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நிலை படிப்படியாகத் தேறி வந்தது.
இந்நிலையில் மாறன் நன்றாகக் குணமடைந்து விட்டதைத் தொடர்ந்து அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள்முடிவு செய்தனர்.
அதன்படி இன்று மாறன் வீட்டுக்குக் கிளம்பினார். அவருடைய குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் சென்னை திரும்பி வந்து ஓய்வெடுப்பாரா அல்லது டெல்லியிலேயே ஓய்வெடுப்பாராஎன்பது குறித்து தெரியவில்லை.
கருணாநிதி சார்பாக அவருடைய மகனும் திமுக இளைஞரணித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அடிக்கடி டெல்லிசென்று மாறன் உடல் நிலையைக் கேட்டறிந்தார்.
முன்னதாக பிரதமர் வாஜ்பாய் சார்பில் பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் விஜய் கோயல் இன்றுகாலை மாறனைச் சந்தித்து பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து வாழ்த்தினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications