திருச்சி ராகிங் கொலை: 2வது நாளாக குழு விசாரணை
திருச்சி:
திருச்சி கல்லூரியில் ராகிங் கொலைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக அரசு சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர்கொண்ட குழுவினர் நேற்று தங்கள் விசாரணையைத் தொடங்கினர். இன்று இரண்டாவது நாளாக தங்கள்விசாரணையைத் தொடர்ந்தனர்.
கடந்த வாரம் திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரியில் ராகிங் செய்தவர்களைத் தட்டிக் கேட்டஅழகர்சாமி என்ற மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
கூலிப் படையினர் துணையுடன் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களே இந்தப் படுகொலையைச்செய்தனர். இது தொடர்பாக இதுவரை பிரதீப், ஆனந்தகுமார் மற்றும் கொலையை செய்த ஆறுமுகம் ஆகிய மூன்றுமாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் ச. முத்துக்குமரன்தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நேற்றும் இன்றும் கல்லூரிக்கு நேரில் சென்றுவிசாரணை நடத்தி வருகிறது.
கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஈ.வெ.ரா. கல்லூரி முதல்வரான என். கருணாநிதிமற்றும் கல்லூரி ஆசிரியர்கள் நேற்று இந்தக் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
கல்லூரியில் ராகிங் சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனர்.
இன்றும் விசாரணை:
இன்று இந்தக் குழுவினர் முன்பாக கல்லூரி மாணவர்களும் டீக் கடை உரிமையாளர்களும் ஆஜராகி வாககுமூலம்அளித்தனர்.
இவர்கள் தவிர சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்களும் இந்த விசாரணைக் குழுவினரிடம் வாக்குமூலம்அளித்து வருகின்றனர்.
இந்தக் குழு நாளையே விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும்.
இதற்கிடையே கல்வி அமைச்சர் தம்பித்துரை, செய்தித்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்அழகர்சாமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications