சொத்து குவிப்பு: டி.ஐ.ஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சென்னை:
தமிழக ஊர்க் காவல் படை டி.ஐ.ஜி. ராமநாதன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை லஞ்ச-ஒழிப்புத்துறை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.
பெரும் ஊழல் பெருச்சாளியாகக் கருதப்படும் ராமநாதன் கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளார். சேலத்தில்போலீஸ் கமிஷ்னராக இருந்தபோது அப்போதைய திமுக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்குமிக நெருக்கமாக இருந்தார்.
அப்போது ஆறுமுகத்தின் மகன் செய்து வந்த கட்டப் பஞசாயத்துகளுக்கு உதவியாக இருந்தார். சென்னை,செங்கல்பட்டு ஆகிய இடங்களில் பதவியில் இருந்தாலும் பணம் குவித்தது சேலத்தில் தான் என்று தெரிகிறது.
அப்போதைய அமைச்சரின் முழு ஆதரவு இருந்ததால் இவர் ஊழலில் திளைத்தார் என்று கூறப்படுவதுண்டு. அதைஉறுதி செய்யும் வகையில் இவருக்கு சென்னையில் நீலாங்கரையில் பல கோடி மதிப்புள்ள பங்களாவும், தமிழகம்முழுவதும் பல பினாமி சொத்துக்களும் உள்ளன.
இந்நிலையில் ராமநாதனின் வீட்டில் கடந்த 22ம் தேதி லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனையிட்டனர்.
நீலாங்கரை சன்ரைஸ் அவென்யூவில் உள்ள இவரது வீட்டை லஞ்ச- ஒழிப்புப் போலீசார் முற்றுகையிட்டனர். காலை7 மணிக்கு ஆரம்பித்த இந்த சோதனை 10 மணி நேரம் தொடர்ந்து. சென்னை அண்ணாநகரில் உள்ள இவரதுபினாமியின் வீடு, திருவண்ணாமலையில் உள்ள இவரது உறவினரின் வீட்டிலும் சோதனை நடந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள திலகவதி ஐ.பி.எஸ்சின் உத்தரவின் பேரில் இந்தசோதனை நடந்துள்ளது.
லஞ்ச- ஒழிப்பு கூடுதல் எஸ்.பி. முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகசாமி, ராஜா சீனிவாஸ், இளங்கோதலையிைல் போலீசார் இந்தச் சோதனைகளில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனைகளின் போது ஏராளமான நில மற்றும் சொத்து ஆவணங்கள், ஏராளமான தங்க நகைகள்ஆகியவை கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
சிவகங்கைையச் சேர்ந்தவர் ராமநாதன். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எப்படிச்சேர்ந்தது என்று தெரியவில்லை. 1993ம் ஆண்டிலேயே இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காகவழக்கு பதிவாகிவிட்டது.
இந்நிலையில் ராமநாதன், அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரின் பெயர்களின் இருந்த வங்கிக்கணக்குகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் உள்ள ராமநாதனின் மகன் ரவிக்குமாரின் பெயரில் சென்னை-அடையாறில் உள்ளஒரு என்.ஆர்.ஐ. வங்கிக் கணக்கு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications