விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர் ஒருவர் நேற்று பட்டப் பகலில் அரிவாளால்வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (27).சவுக்கு மர வியாபாரியான இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டக் குழுவின் உறுப்பினர் ஆவார்.
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இங்கு மார்க்சிஸ்ட் சார்பில் ஆனந்தவேலு என்பவரும் தமாகா சார்பில் முரளிஎன்பவரும் போட்டியிட்டனர். இவர்களில் முரளி வெற்றி பெற்றார்.
தேர்தலைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. அப்போது கடந்த நவம்பர்மாதம் பாண்டிச்சேரியிலிருந்து வந்த 20 பேர் கண்டமங்கலத்திற்கு வந்து பொதுமக்களைத் தாக்கினர்.
பதிலுக்கு அந்த ஊர் மக்கள் தாக்கியதில் ரமேஷ் என்பவர் இறந்தார். இதைத் தொடர்ந்து ஒரு வழக்கில் முரளி மீதும்மற்றொரு வழக்கில் சுரேஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில்வெளியே வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை சுரேஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பாபு சமுத்திரம் அருகே ஒரு கும்பல்அவரை வழிமறித்து கத்தியால் குத்தியது.
இதையடுத்து சுரேஷ் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விடாமல் தொடர்ந்து விரட்டிய கும்பல் அவரைஅரிவாளால் வெட்டிக் கீழே சாய்த்தது.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுரேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக ஊராட்சித் தலைவர் சவுரிராஜன், அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் முரளி,பத்திரிக்கை நிருபர் கன்னியப்பன் உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொலையாளிகளைக் கண்டுபிடிக்க தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications