திமுக பேரணி கலவரம்: மீண்டும் சாட்சியளித்தார் முத்துக்கருப்பன்
சென்னை:
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த திமுக பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து அப்போதைய சென்னைமாநகர போலீஸ் கமிஷனரான முத்துக்கருப்பன் நேற்று விசாரணை கமிஷன் முன் சாட்சியமளித்தார்.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த ஆண்டுஆகஸ்டு 12ம் தேதி சென்னையில் அக்கட்சியினர் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணியின் முடிவில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5திமுகவினர் உயிரிழந்தனர். அப்போது பத்திரிக்கை நிருபர்களிடமும் போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்.
இந்த வன்முறை குறித்து நீதிபதி பக்தவத்சலம் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றைத் தமிழக அரசுநியமித்தது.
பேரணி நடந்த போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன் ஏற்கனவே இரண்டு முறை இந்தக்கமிஷன் முன் ஆஜராகி சாட்சியமளித்தார்.
இந்நிலையில் நேற்றும் அவர் மூன்றாவது முறையாக விசாரணைக் கமிஷனின் முன் தோன்றி சுமார் இரண்டு மணிநேரம் வரை சாட்சியமளித்தார்.
திமுக வழக்கறிஞரான பாலகுருவும் முத்துக்கருப்பனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது அவர் கேட்டபல கேள்விகளுக்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சவுந்தரராஜன் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனால் இரண்டு வழக்கறிஞர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
இந்நிலையில் முத்துக்கருப்பன் இன்றும் விசாரணைக் கமிஷன் முன்பாகத் தோன்றி சாட்சியமளிப்பார் என்றுதெரிகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications