வைகோ- பெர்னாண்டஸ் சந்திப்பு: மக்களவையில் பெரும் அமளி
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பாதுகாப்புத்துறைஅமைச்சர் எப்படி சிறையில் சென்று சந்திக்கலாம் என்று கேட்டு மக்களவையில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில்ஈடுபட்டன.
அதிமுக எம்.பி. பி.எச். பாண்டியன் மிகக் கடுமையான வார்த்தைகளால் இந்தச் சந்திப்பை விமர்சித்தார். அவருக்குபா.ஜ.க. மற்றும் மதிமுக உறுப்பினர்கள் கோபமாக பதில் தந்தனர். இதையடுத்து பாண்டியனின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள வைகோவை மத்திய அமைச்சரவையில் உள்ள பெர்னாண்டஸ் எப்படிப் போய் பார்க்கலாம்என்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு குரல் எழுப்பின.
காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் பேசுகையில்,
இலங்கையில் விடுதலைப் புலிகளால் இந்திய ராணுவத்தினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த ராணுவத்துக்குஅமைச்சராக உள்ள பெர்னாண்டஸ் இப்போது புலிகளை ஆதரித்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ள ஒருவரை(வைகோ) சந்தித்துப் பேசியிருக்கிறார். இது ராணுவத்தின் முதுகில் அதன் அமைச்சரே குத்துவதற்குச் சமம். அது மட்டுமல்ல புலிகளால் நமதுநாட்டின் பிரதமரும் படுகொலை செய்யப்பட்டார்.
அப்படிப்பட்ட புலிகளை ஆதரிக்கும் வைகோவை ராணுவ அமைச்சரே போய் சந்திப்பது நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றார் பாட்டீல்.
இதற்கு மதிமுக உறுப்பினர்களும் பா.ஜ.கவினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொண்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் குரல் எழுப்பினர்.
இதையடுத்து அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
அப்போது எழுந்த துணைப் பிரதமர் அத்வானி, சிறையில் இருக்கும் ஒருவரை அமைச்சர் சென்று சந்திக்கக் கூடாதுஎன்று எந்தச் சட்டத்திலும் எழுதப்பட்டிருக்கவில்லை. சிறையில் இருக்கும் எம்.பி. ஒருவரை அவருடைய சக எம்.பி.சென்று பார்ப்பதற்கு முழு உரிமையும் உண்டு. தனது தனிப்பட்ட நட்பு காரணமாக பெர்னாண்டஸ் வைகோவைசந்தித்துள்ளார். இதன்மூலம் யாருக்கும் பெர்னாண்டஸ் துரோகம் செய்துவிடவில்லை என்றார் அத்வானி.
அதே நேரத்தில் வைகோ கைது விஷயத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அந்தக் கட்சியின் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், இந்தச் சட்டத்தில்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.
இதற்கு அத்வானி பதிலளித்த போது கூறுகையில்,
வைகோ கைது செய்யப்பட்டுள்ளது முழுக்க முழுக்க தமிழக அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை. இதில் மத்திய அரசுதலையிட முடியாது. தலையிடவும் செய்யாது. ஜனாதிபதி தேர்தலில் வைகோ வந்து வாக்களிக்க அனுமதிஅளிக்கப்பட்டது.
அது போல் தன்னுடைய கைதை எதிர்த்து வழக்கு தொடர பொடா சட்டத்திலேயே இடம் உள்ளது என்றார்.
இந்த விவகாரத்தில் அதிமுக எம்.பியான பி.எச். பாண்டியன் பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications