2 திருச்சி கொலையாளிகள் புதுவையில் பதுங்கல்: சுற்றி வளைத்து பிடித்த போலீசார்
பாண்டிச்சேரி:
பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த 2 கொலையாளிகள் பாண்டிச்சேரியில் போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர்.
திருச்சியைச் சேர்ந்த செல்வம் மற்றும் பாரதி ஆகிய இருவரும் பயங்கரமான ரவுடிகள். பணம் கொடுத்தால் கொலை செய்யும் கூலிப் படையைச் சேர்ந்தவர்கள். பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக திருச்சி போலீசார் இவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த இரண்டு ரவுடிகளும் பாண்டிச்சேரியில் பதுங்கியிருப்பதாகத் திருச்சி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாண்டிச்சேரி விரைந்த தனிப் போலீஸ் படையினர் அந்நகரப் போலீசாரின் உதவியுடன் ரவுடிகளைத் தேடினர். அப்போது அவர்கள் இருவரும் முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து திருச்சி-பாண்டிச்சேரி போலீசார் இன்று காலை அந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர். ஆனால் அந்த இரு ரவுடிகளும் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் காட்டி போலீசாரை மிரட்டி தப்பிக்க முயற்சித்தனர்.
இருந்தாலும் துப்பாக்கி முனையில் போலீசாரும் வீட்டைச் சுற்றி நின்று கொண்டிருந்ததால் அந்த ரவுடிகளால் எளிதாகத் தப்பிச் செல்ல முடியவில்லை.
சுமார் ஐந்து மணி நேரம் ரவுடிகள் "கண்ணாமூச்சி" ஆடிக் கொண்டிருந்தனர். பின்னர் ஒரு வழியாகப் போலீசார் திடீரென்று அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்து இரண்டு ரவுடிகளையும் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட சில ஆயுதங்கள், செல்போன் மற்றும் ஒரு மாருதி கார் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து அந்தக் கொலைகார ரவுடிகள் திருச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சுமார் ஐந்து மணி நேரம் இச்சம்பவம் நீடித்ததால் முத்தியால்பேட்டை பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு நிலவியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications