55வது சுதந்திர தின விழா: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவின் 55வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகவும் உற்சாகத்துடனும் அதே நேரத்தில்பலத்த பாதுகாப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் வாஜ்பாய் சரியாக காலை 7.30 மணிக்குதேசியக் கொடியேற்றினார்.

முன்னதாக அவர் மகாத்மா காந்தியின் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பாகிஸ்தானுக்கு வாஜ்பாய் சூடு:

கொடியேற்றிய பின் வாஜ்பாய் ஆற்றிய உரையில்,

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் இன்னும் தூண்டி விட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இவ்விஷயத்தில் வழக்கம் போல பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது.தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு உதவுவது போல் நடித்துக் கொண்டுஇந்தியாவுக்குள் பயங்கரவாதத்தைத் தொடர்ந்து அந்நாடு தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் போன்ற பக்கத்து நாடுகளுடன் எப்போதும் சுமூகமாகப் போவதையே இந்தியா விரும்வி வந்துள்ளது.ஆனால் அனைத்து வாய்ப்புக்களையும் பாகிஸ்தான் தான் நழுவ விட்டுக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்தைஇந்தியாவுக்குள் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு பயங்கரவாதத்தைத் தூண்டி விடுவதன் மூலம் காஷ்மீரை இந்தியாவிடமிருந்து துண்டாட நினைக்கிறது.ஆனால் காஷ்மீர் விவகாரத்தில் கடந்த காலத்தில் நடந்த தவறுகள் அனைத்திற்கும் வரவிருக்கும் சட்டசபைத்தேர்தல் மூலம் தகுந்த பதில் கொடுக்கப்படும்.

இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு காஷ்மீர் தான் சிறந்த உதாரணமாகும். வரும் அக்டோபர் மாதம் நடைபெறும்தேர்தலுக்குப் பின்னர் பண்டிட்டுகள் உள்ளிட்ட அனைத்து காஷ்மீர் அகதிகளும் தங்கள் மாநிலத்திற்குத் திரும்பவாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார் வாஜ்பாய்.

மேலும் "அக்னி" மற்றும் "பிரம்மோஸ்" போன்ற ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் விரைவில் சேர்க்கப்படும்என்றும் வாஜ்பாய் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுதந்திர தின விழா:

இதற்கிடையே தமிழகத்திலும் சுதந்திர தின விழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.

பிரிவினைவாதிகளைத் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் தன்னுடைய சுதந்திர தின உரையில்வலியுறுத்தினார்.

ஜாதி, மொழி மற்றும் மதத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தைத் துண்டாட சில இயக்கங்களும் கட்சிகளும்முனைந்து கொண்டிருக்கின்றன என்றும் குற்றம் சாட்டிய ஜெயலலிதா இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும்குறிப்பிட்டார்.

சர்வதேசத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு சில பிரிவினைவாதிகள் தமிழகத்தில் வன்முறைகளைத் தூண்டமுயற்சித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். அவர்களை இரும்புக் கரம்கொண்டு அடக்குவோம் என்றும் ஜெயலலிதா சூளுரைத்தார்.

இதே போல் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் மாவட்டக் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து சுதந்திர தினவிழாவைக் கொண்டாடினார்கள்.

ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளிலும் கொடியேற்றி வைத்து சுதந்திர தின விழாவைக் கொண்டாடினார்கள். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என்று பெரும்பாலான வாகனங்களில் மக்கள் தேசியக் கொடிகளைசொருகி வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

சுதந்திர தின விழாவையொட்டி பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் பேச்சுப்போட்டிகளும் நடத்தப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+