காவிரி ஆணைய கூட்டத்தில் இருந்து ஜெயலலிதா வெளிநடப்பு- பிரதமர் அதிர்ச்சி
டெல்லி:
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நேற்றிரவு நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவெளிநடப்பு செய்தார்.
பிரதமர் முன்னிலையில் தண்ணீர் விட முடியாது என கர்நாடக முதல்வர் தொடர்ந்து கூறியதால் எரிச்சலடைந்த ஜெயலலிதா வெளிநடப்புசெய்தார்.
இதன்மூலம் கையாலாகாத மத்திய அரசுக்கும், திமிர் பிடித்த கர்நாடக அரசுக்கும் தனது பாணியிலேயே எதிர்ப்புத் தெரிவித்துவித்துள்ளார்ஜெயலலிதா.
இதனால் அதிர்ச்சியடைந்த வாஜ்பாய், இரு மாநிலங்களும் இந்தப் பிரச்சனையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்று கூறிவிட்டு எழுந்துசென்றார்.
ஜெயலலிதாவின் இந்த செயலால் கூட்டத்தில் உடன் இருந்த தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பாசனத்துறை,விவசாயத்துறை செயலாளர்கள், காவிரி டெக்னிகல் பிரிவு ஊழியர்கள் சிறிது நேரம் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
வாஜ்பாய் அருகே சென்று அவருக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு ஜெயலலிதா அந்த அறையை விட்டு வேகமாக வெளியேற தமிழகபிரதிநிதிகளும் பின்னால் ஓடினர்.
முன்னதாகக் கூட்டம் தொடங்கியவுடன் முதலில் பேசிய பிரதமர் வாஜ்பாய்,
காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக, கர்நாடக முதல்வர்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நாம்அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள். ஓரின மக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. புனித நதிகளைப் போல எத்தனையோவிஷயங்கள் நம்மை ஒருங்கிணைத்து வைத்துள்ளன.
காவிரி நீரை பங்கிக்கிட்டுக் கொள்ளும் மாநிலங்கள் ஒருவொருவரின் துயரத்தையும் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவவேண்டும் என்றார்.
பிரதமரின் பேச்சு சுதந்திர தின உரை போலத் தான் அமைந்திருந்ததே தவிர தவறு செய்த கர்நாடகத்துக்கு அறிவுரை சொல்லும் வகையில்இல்லை. இதே ரீதியில் தான் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் பேசினார்.
காலையில் வீரப்பன் விவகாரத்தில் விட்டுக் கொடுத்துப் பேசிய கிருஷ்ணா காவிரி விஷயத்தில் தனது நிலையில் பிடிவாதமாக இருந்தார்.தமிழகத்துக்குத் தண்ணீர் விடும் நிலையில் நாங்கள் இல்லை என்றார்.
இதனால் இந்தக் கூட்டத்தில் இனியும் உட்கார்ந்திருப்பது வெட்டி வேலை என்பதால் அதை விட்டு வெளியேறியுள்ளார் ஜெயலலிதா.
தமிழகத்தில் குறுவை சாகுபடியை முழுவதுமாக சீரழித்த கர்நாடகம், இப்போது சம்பா நெல் சாகுபடியையும் சீரழித்து தமிழகவிவசாயிகளையும் மக்களையும் பட்டினிக்குத் தள்ள முயன்று வருவதாகத் தெரிகிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்தக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியிருந்தார். நீதிமன்ற உத்தரவு இருப்பதால் தான் இந்தக் கூட்டத்தில்பங்கேற்கிறேன் என்று கூறிவிட்டுத் தான் ஜெயலலிதாவும் டெல்லி சென்றார்.
காவிரி நீரைத் தராமல் நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகம் மீறியது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குவிசாரணையில் உள்ளது குறிப்பிடதக்க்கது. இப்போது பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதால் உச்ச நீதிமன்றத்தீர்ப்பைத் தான் தமிழகம் முழுக்க முழுக்க நம்பியுள்ளது.
இதற்கிடையே தமிழக காவிரி டெக்னிகல் பிரிவின் தலைவர் டாக்டர் மோகனகிருஷ்ணன் புள்ளி விவரங்களுடன் கர்நாடக அரசு செய்ததவறுகளை சுட்டிக் காட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், கர்நாடகத்துக்கு போதிய அளவு மழை கிடைக்கவில்லை என்பது உண்மை தான். கர்நாடகத்தில் உள்ள காவிரி நதி நீர்பிடிப்புப் பகுதியில் நூறு சதவீத அளவுக்கு மழை பெய்யாவிட்டாலும் கூட 69 சதவீத மழை பெய்துள்ளது. இந்த 69 சதவீதத்தில்தமிழகத்துக்குத் தர வேண்டிய பங்கு நீரை கர்நாடகம் ஏன் தரவில்லை?.
100 சதவீத மழை பெய்தால் தான் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது பற்றி யோசிக்கவே முடியும் என்கிறது கர்நாடகம். இது நடுவர் மன்றத்தின்தீர்ப்புக்கும் மனித நேயத்துக்கும் எதிரானது.
எங்களுக்குப் போக மிச்சமிருக்கும் தண்ணீரைத் தான் தமிழக்ததுத் தர முடியும் என்ற அர்த்தம்கெட்ட நிலையை கர்நாடகம் எடுத்துள்ளதுஎன்றார் அவர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications