இந்தியாவில் லாக்-அப் சாவுகள் அதிகம்: ஆம்னஸ்டி கவலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியாவில் லாக்-அப் சாவுகள் அதிகத்து வருவதாக அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட "ஆம்னஸ்டிசர்வதேச மனித உரிமைகள்" அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஆம்னஸ்டி அமைப்பின் வருடாந்திர அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்சென்னையில் இந்த அறிக்கையை ஆம்னஸ்டி அமைப்பின் பொதுச் செயலாளர் ஐரீன் கான் வெளியிட்டார்.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- உலக அளவில் மனித உரிமை மீறல்கள் அதிகம் உள்ளன. மொத்தம் 152 நாடுகளில் இதுதொடர்பான புகார்கள் வந்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை இது அதிகரித்தவண்ணம் உள்ளது.
- ஏப்ரல் 2000 முதல் மார்ச் 2001 வரையிலான கால கட்டத்தில் இந்தியாவில் 127 பேர் லாக்-அப்களில் இறந்துள்ளனர்.
- வேண்டும் என்றே தவறு செய்யாத, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றங்கள் செய்து விட்டு தண்டனை அனுபவிப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் அனைத்து நாடுகளின் அரசுகளுக்கும் ஆம்னஸ்டி கோரிக்கை வைத்துள்ளது.
- மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சீனாதான் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அங்கு 2,468 பேருக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
- ஈரானுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. அங்கு 139 பேர் கொல்லப்பட்டனர். செளதி அரேபியாவில் 79 பேரும், வளர்ந்த நாடான அமெரிக்காவில் 60 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் 16 பேருக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- மொத்தமாக, 68 நாடுகளைச் சேர்ந்த 5,265 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் 31 நாடுகளைச் சேர்ந்த 3,048 பேருக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- உலகம் முழுவதிலும் வன்முறையும், பயங்கரவாதம் அதிகரித்து வருவதற்கு ஆம்னஸ்டி அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை எதிர்க்கும் முயற்சிகளுக்கு மனித உரிமைகள் பெரும் தடைக்கல்லாக இருப்பதாக வளர்ந்த நாடுகள் நினைப்பது அதைவிட பெரும் கவலையளிக்கிறது.
இவ்வாறு ஆம்னஸ்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications