2வது கேசட்டே வரவில்லை: கர்நாடகம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டது முதல் வீரப்பனிடமிருந்து 2வது கேசட் எதுவும் வரவில்லைஎன்று கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

சமீபத்தில் வீரப்பனிடமிருந்து வந்த இரண்டாவது கேசட்டை பழனியப்பா என்பவர் கர்நாடக டி.ஜி.பியானபாஸ்கரிடம் கொடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்தக் கேசட் குறித்தோ அதில் உள்ள தகவல்கள் குறித்தோ கர்நாடக அரசிடமிருந்து எந்தவிதமானதகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து நிருபர்களிடம் கார்கே கூறுகையில்,

வீரப்பனிடமிருந்து இரண்டாவது கேசட் வரவில்லை. நாகப்பாவை மீட்பது தொடர்பாக யாரைத் தூதராகஅனுப்புவது என்பது குறித்தும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

நாகப்பாவை உயிருடன் மீட்கும் வகையில் செயல்பட அதிரடிப்படைக்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது என்றார்கார்கே.

டி.ஜி.பியும் மறுப்பு:

இதற்கிடையே வீரப்பனிடமிருந்து இரண்டாவது கேசட் வந்தது என்பதை பாஸ்கரும் மறுத்துள்ளார்.

வீரப்பனிடமிருந்தோ அவனுடைய கூட்டாளிகளிடமிருந்தோ எந்தவிதமான கேசட்டும் வரவில்லை என்றும் அவர்கூறினார்.

நாகப்பாவை உயிருடன் மீட்பது தான் முதல் நோக்கம் என்றும் வீரப்பன் கும்பலை கூண்டோடு பிடிப்பது அடுத்தநோக்கம் என்றும் பாஸ்கர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+