அச்சத்தில் தமிழர்கள்: கன்னட வெறியர்கள் தாக்கும் அபாயம்
பெங்களூர்:
காவிரியில் நீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் தமிழர்களுக்கு எதிராக தாக்குதல்நடத்தலாம் என்ற அச்சம் பரவியுள்ளது.
காவிரியை சாக்காக வைத்து பலமுறை தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பங்காரப்பா முதல்வராக இருந்தபோது குஜராத் முதல்வர் நரேந்திரமோடி ஸ்டைலில் அரசாங்கத்தை வைத்தே தமிழர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தினார்.
அவரது தலைமையிலான அரசின் தூண்டுதலால் போலீசாரும், ரவுடிகளும், கன்னட வெறியர்களும் தமிழர்களைத் தாக்கினர்.
இப்போது காவிரி விவகாரத்தில் தொடர்ந்து முரண்டு பிடித்து வரும் கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
இதனால் முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நீதிமன்ற உத்தரவை எதிர்ப்பது குறித்து விவாதிக்க கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.
தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தனது முடிவில் தீவிரமாக இருந்தால், அல்லது மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவான(நீதிமன்றத்துக்கு ஆதரவான) நிலையை எடுத்தால் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நடக்கலாம்.
வீரப்பனால் நாகப்பா கடத்திச் சென்றுள்ளதையும் மனதில் வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் நடக்கவாய்ப்புக்கள் உள்ளன.
இதைத் தடுக்க வேண்டிய முழு கடமை கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு உண்டு. குறிப்பா வாட்டாள் நாகராஜ் போன்றவர்களை மாநில அரசுஅடக்கி வைக்க வேண்டும்.
மைசூர், மாண்டியா பாதுகாப்பு:
இதற்கிடையே மைசூர், மாண்டியா, ஹாசன், பெங்களூர் ஊரக மாவட்டம் ஆகிய காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி கலாட்டா நடந்தபோதெல்லாம் பெங்களூர் நகருக்கு இணையாக மிக பயங்கரமாக பாதிக்கப்பட்டது இந்தப் பகுதிகளில் வசிக்கும்தமிழர்கள் தான் என்பது குறிப்பிடதக்கது.
இப்போது காவிரியில் நீர் விட கர்நாடகத்தக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் இந்தப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்துபாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுப் பிரிவு மாநில போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த மாவட்டங்களில்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications