சந்திரிகாவுக்கு கெடு முடிந்தது: அதிகாரக் குறைப்பு உறுதி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அதிகாரக் குறைப்பு தொடர்பான சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இலங்கை அரசுமுடிவு செய்துவிட்டது.
அதிகாரத்தைக் குறைத்துக் கொள்ள நேற்று வரை சந்திரிகாவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கெடு விதித்திருந்தார். ஆனால், இதுதொடர்பாகவும் சட்டத் திருத்தம் தொடர்பாகவும் சந்திரிகா தனது கருத்துக்களை நேற்று வரை தெரிவிக்கவில்லை.
இதனால் அவரது அதிகாரத்தைக் குறைக்கும் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கும் செய்யும் நடவடிக்கையைத் தொடங்குமாறுஅமைச்சரவைக்கு பிரதமர் ரணில் இன்று உத்தரவிட்டார்.
அதற்கு முன்பாக இந்த அதிகாரக் குறைப்பை அரசின் அதிகாரப்பூர்வ கெசட்டிலும் வெளியிட ரணில் முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications