ஜெயலலிதா வணங்கும் கேரள கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து நேரடி பஸ் வசதி
கன்னூர் (கேரளா):
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தலிப்பரம்பு அருகே உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து நேரடி பஸ் சர்வீஸ்அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் இந்தக் கோவிலின் தீவிர பக்தை என்பது குறிப்பிடத்தத்தது.
வழக்குகளில் இருந்து விடுதலையாவதற்காக இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டார் ஜெயலலிதா. இதன் பின்னர் மீண்டும் வென்றுமுதல்வராவதற்காக இக் கோவிலுக்குச் சென்றார்.
வழக்குகளில் இருந்து விடுபட்ட பின்னரும் முதல்வரான பின்னரும் இந்தக் கோவிலுக்கு தங்கக் குடத்தை காணிக்கையாகத் தந்து தனதுநேர்த்திக் கடனை செலுத்தினார் ஜெயலலிதா.
இந் நிலையில் இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் சேவையைத் தொடங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேரடி பஸ் சேவையைத்தொடங்க வேண்டும் என இந்தக் கோவில் நிர்வாகத்தின் சார்பில கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதாககோவிலின் செயல் அதிகாரி பாபு கூறினார்.
சேலம், ஈரோடு, கோவையில் இருந்து அதிக பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வருவதால் முதல் கட்டமாக கோயம்புத்தூரில் இருந்துகோவிலுக்கு நேரடி பஸ் சேவை அறிமுகமாகிறது. பாண்டிச்சேரி, சென்னையில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். விரைவில் இந்த பஸ்சேவை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளதாக பாபு தெரிவித்தார்.
இது குறித்து கோவில் நிர்வாகத்துடன் விவாதிக்க தமிழக போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் மெய்யப்பன் சமீபத்தில்தலிப்பரம்பு சென்று வந்துள்ளதாகத் தெரிகிறது.
காவிரி, வீரப்பன் விவகாரங்களில் ஜெயலலிதாவுடன் மோதி வரும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் கூட இந்தக் கோவிலின் பக்தர் தான்என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கிருஷ்ணா இந்தக் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திச் சென்றார்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications