வீரப்பன் குறித்து தகவல் தரும் போலீஸ் உளவாளி திடீர் மாயம்
கொளத்தூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்து தகவல் தரும் போலீஸ் உளவாளியை கர்நாடக அதிரடிப்படை போலீஸார்அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் என்ன ஆனார் என்பது குறித்துத் தகவல் இல்லை.
சேலம் மாவட்டம் கொளத்தூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி லட்சுமி, நக்கீரன் நிருபர் சுப்புவின்சகோதரி ஆவார். வீரப்பன் நடமாட்டம் குறித்து கர்நாடக போலீஸாருக்கு முருகேசன் உளவு சொல்வதுவழக்கமாம்.
இந்த நிலையில, கடந்த சில நாட்களாக முருகேசனைக் காணவில்லை. கர்நாடக அதிரடிப்படையினர் அவரைஅழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் முருகேசனின் மனைவி லட்சுமிபோலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்துகொளத்தூர் போலீஸார் கூறுகையில்,
முருகேசனுடன் சுப்பு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். வீரப்பன் குறித்து இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்தே முருகேசனை கர்நாடக போலீஸார் அழைத்துச் சென்றிருப்பர் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications