பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு வெளிநாடு செல்ல தடை

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்துபாண்டிச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்து எம்.எல்.ஏக்களும் சுற்றுப்பயணம் செய்யவிரும்பி அதற்குரிய அனுமதியை மத்திய அரசிடம் கேட்டிருந்தனர்.

சபாநாயகர் ராமச்சந்திரன் இதுதொடர்பாக மத்திய பாராளுமன்ற செயலகம், உள்துறை அமைச்சகம், சட்டஅமைச்சகம், சிங்கப்பூர் அரசு ஆகியோருக்கு அனுமதி கோரி கடிதம் எழுதினார்.

இதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்காத போதிலும், மத்திய வெளியுறவுத்தறை இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

அரசியல் காரணங்களுக்காக ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களும் வெளிநாடு செல்வதை அனுமதிக்க முடியாது என்றுவெளியுறவுத்துறை கூறி விட்டதாம்.

இதனால் பாண்டிச்சேரி எம்.எல்.ஏக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+