பிகார்: ஆற்றுக்குள் ரயில் கவிழ்ந்து 80 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ரபிகஞ்ச் (பிகார்):

ஹவுராவிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பிகார் மாநிலத்தில்உள்ள ஒரு ஆற்றில் கவிழ்ந்ததில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 10.40 மணிக்கு நிகழ்ந்த இந்த மோசமான விபத்திற்கு நாசவேலை தான் காரணம்என்று மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

இந்த ராஜதானி எக்ஸ்பிரஸ்சின் சுமார் 13 பெட்டிகள் ஆற்றுக்குள் மூழ்கி விட்டன. இதுவரை சுமார் 80 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 36 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்னும் பல பயணிகள் ஆற்றுக்குள் மூழ்கிக் கிடக்கும் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். பலர் ஆற்றோடுஅடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே இதுவரை சுமார் 93 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சியால்தாஎக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர்.

நடந்த விபத்து குறித்து உயிர் பிழைத்த ஒவ்வொரு பயணியும் தான் தப்பித்தது குறித்து அச்சத்துடனும்ஆச்சரியத்துடனும் நிருபர்களிடம் விளக்கினர்.

இதே போல் மீட்கப்பட்ட பயணிகளில் பலர் கொல்கத்தா ரயில் நிலையத்திற்கும் வந்து சேர்ந்துள்ளனர்.

இதற்கிடையே இந்த பயங்கரமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+