ஹெலிகாப்டரிலிருந்து கயிறு கட்டி காட்டுக்குள் இறங்கும் அதிரடிப் படை
சென்னை:
வீரப்பன் மறைந்துள்ள காட்டுக்குள் ஹெலிகாப்டரிலிருந்து கயிறு கட்டி இறங்கி வீரப்பனை சுட்டுப் பிடிக்ககர்நாடக அதிரடிப்படை திட்டமிட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் தீவிரமாக முயன்றுவருகின்றனர். இருப்பினும் வீரப்பன் எங்கே இருக்கிறான் என்ற கால் சுவடு கூட இன்னும் சிக்கவில்லை.
பல்வேறு புதிய ஐடியாக்களை கர்நாடக அதிரடிப்படையினர் தீட்டி வருகின்றனர். அதில் ஒன்றுதான் கொரில்லாமுறை தாக்குதல்.
ஹெலிகாப்டர் மூலம் வீரப்பன் இருப்பிடத்தை அடையாளம் கண்டு கொள்வது, பின்னர் அந்தக் குறிப்பிட்டஇடத்தில் கயிறு கட்டி கீழே இறங்கி, வீரப்பனை பிடிப்பது என்பதுதான் லேட்டஸ்ட் ஐடியா.
இதற்காக காட்டுக்குள் பல்வேறு இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கேற்ற தளம் அமைக்கும் பணியைகர்நாடக அதிரடிப்படை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக மற்றும் தமிழக காட்டுப் பகுதி எல்லைகள் சீல்வைக்கப்பட்டுள்ளன.
வீரப்பன் கும்பல் தற்போது இரண்டாகப் பிரிந்து செல்வதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும்அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
-->












Click it and Unblock the Notifications