காவிரி விவகாரத்தில் எல்லாமே வெளிப்படை தான்: ஜெ.விளக்கம்
சென்னை:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது வெளிப்படையாகவேசெய்யப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரிப் பிரச்சினையில் நானும்,தமிழக அரசும் தன்னிச்சையாக நடப்பதாக சில அரசியல் கட்சிகளும்,பத்திரிக்கைகளும் புகார் கூறியபடி உள்ளன. இது வருத்தம் தரக் கூடியது, கண்டனத்துக்குரியது.
இந்த விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்படுகிறது.அவ்வப்போது மக்களுக்கும் அதைத் தெரிவித்து வருகிறோம். வெளிப்படையாகவே அரசு செயல்பட்டு வருகிறது.
கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர்களது மாநிலம் மீதும், காவிரியின் மீதும் உள்ள பற்று தமிழகஅரசியல் தலைவர்களிடையே காணப்படாதது வேதனைக்குரியது. கண்டனத்துக்கும் உரியது.
கோர்ட்டுக்குப் போனதால் தான் நமக்கு நியாயம் கிடைத்தது. நாம் கோரியபடி தண்ணீர் விட கர்நாடகத்திற்குகோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் அதை அவமானப்படுத்தும் விதமாக ஆணையத்தைக் கூட்டி கர்நாடகம் தனக்கு சாதகமாகவே பிரதமரைதீர்ப்பு சொல்ல வைத்து விட்டது. இதை எதிர்த்துத் தான் மீண்டும் நாம் கோர்ட்டை நாடியுள்ளோம்.
இதை குறுகிய மனம் படைத்த அரசியல்வாதிகளும், சில பத்திரிக்கைகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications