நாகப்பாவை மீட்க தூதரை அனுப்பும் முயற்சியில் கர்நாடக அரசு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காக தூதரை அனுப்பும் முயற்சியில்கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வீரப்பனிடமிருந்து இதுவரை மூன்று கேசட்டுகள் கர்நாடக அரசுக்கு வந்து சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. இவற்றில்ஒன்றில் மட்டும் தான் நாகப்பா பேசியுள்ளார்.

அந்தக் கேசட்டில், தான் நலமாக இருப்பதாகவும் தன்னைப் பற்றித் தன் குடும்பத்தினர் கவலைப்பட வேண்டாம்என்றும் காட்டில் வீரப்பனைத் தேடி வரும் கர்நாடக அதிரடிப்படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்என்றும் நாகப்பா கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே வீரப்பனை நெருங்கி விட்டதாக கடந்த வாரம் அதிரடிப்படையினர் தெரிவித்தனர். எந்தநேரத்திலும் வீரப்பனைப் பிடித்து, நாகப்பாவையும் மீட்டு விடுவோம் என்றும் அதிரடிப்படையினர் கூறினர்.

ஆனால் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியின் போது தன் கணவரின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று கருதியநாகப்பாவின் மனைவி, அதிரடிப்படையினர் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும்இல்லையென்றால் வரும் திங்கள்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாகவும் கர்நாடகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அதிரடிப்படையினரின் வீரப்பன் வேட்டை நிறுத்தப்படுவதாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாகூறினார். கர்நாடக அதிரடிப்படையினரும் தங்கள் தோடுதல் வேட்டையை நிறுத்திக் கொண்டு முகாம்களுக்குத்திரும்பி விட்டனர்.

இதற்கிடையே வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபடுவதற்காக மத்திய அரசால் அனுப்பப்பட்ட 150 தேசியபாதுகாப்புப் படையினர் (கருப்புப் பூனைப் படை கமாண்டோக்கள்), அதிரடிப்படையினர் தங்களுக்குஉதவவில்லை என்று கூறி தேடுதல் பணியை வாபஸ் பெற்றுக் கொண்டு நேற்றே டெல்லி திரும்பிவிட்டனர்.

இந்நிலையில் காட்டுக்குள் தூதரை அனுப்பி வீரப்பனிடமிருந்து நாகப்பாவை மீட்கும் முயற்சியில் கர்நாடக அரசுதீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்பதற்கு உதவிய கொளத்தூர்மணியே இம்முறை தூதராக அனுப்பப்படுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் கர்நாடகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜு கவுடாவும் தூதராகப் போவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.வீரப்பனிடம் நானாகத் தூது போக மாட்டேன். ஆனால் வீரப்பனே என்னை அழைத்தால் காட்டுக்குள் சென்றுஅவனுடன் பேச்சு நடத்தத் தயங்க மாட்டேன் என்று ராஜு கவுடா நேற்று நிருபர்களிடம் கூறினார்.

தமிழக அதிரடிப்படையினரின் தொடரும் வேட்டை:

இதற்கிடையே வீரப்பனைப் பிடிக்கும் வரை தேடுதல் வேட்டையை நிறுத்தப் போவதில்லை என்று தமிழகஅதிரடிப்படை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அதிரடிப்படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேடுதல்வேட்டை நிறுத்தப்படாது என்றும் முழு வீச்சில் நடக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

காட்டுக்குள் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தண்ணீர் உள்ளஇடங்களில் அதிரடிப்படையினர் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். தண்ணீர் தேடி வீரப்பன் கும்பலைச் சேர்ந்தயாராவது வருவார்கள் என்று அதிரடிப்படை எதிர்பார்க்கிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+