கேரள அரசு பஸ் நெல்லையில் பறிமுதல்
திருநெல்வேலி:
சாலை விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு கோர்ட் உத்தரவுப்படி நஷ்ட ஈடு வழங்காததால், கேரள மாநில அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்து திருநெல்வேலியில் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த 1998ம் ஆண்டு வேனில் சென்று கொண்டிருந்தபோது,கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று அந்த வேன் மீது மோதியது.
இவ்விபத்தில் லோகநாதன் பலியானார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி மரிய புஷ்பம் திருநெல்வேலிகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில், வேன் உரிமையாளரும், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.2 லட்சத்து 75,000 நஷ்ட ஈடுவழங்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. இதில் பாதித் தொகையை கேரள போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும்.ஆனால் இதுவரை அது வழங்கவில்லை.
இதையடுத்து மரிய புஷ்பம் மீண்டும் கோர்ட்டை அணுகினார். விசாரித்த நீதிபதி, கேரள அரசுப் போக்குவரத்துக்கழகம் உடனடியாக ரூ.1 லட்சத்து 84,000 ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் அதுவரை கேரளபோக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட் ஊழியர்கள், போலீஸாருடன் சென்று திருநெல்வேலி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தகேரள போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான ஒரு பஸ்சை பறிமுதல் செய்து கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications