இளங்கோவனுக்கு ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ்
சென்னை:
ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசுவேன் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு வக்கீல் நோட்டீஸ்அனுப்பியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆண்டோனியோ மெய்னோ என்று சொந்தப் பெயரை சொல்லி அழைத்து மிகக் கடுமையாகவிமர்சித்தார் ஜெயலலிதா. இதையடுத்து ஜெயலலிதவை கோமவள்ளி என்ற அம்முவே என்று அழைத்து பதிலடி தந்தார் இளங்கோவன்.
சோனியாவை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பல விவரங்கள் வெளிவரும் என்றும்எச்சரித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜெயலலிதா. அதிமுக எம்.பியும் வழக்கறிஞருமான ஜோதி மூலமாக இந்தநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் உங்கள் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இளங்கோவனுக்கு ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இத் தகவலை இளங்கோவனே இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ஜெயலலிதாவுக்கு பதில் அனுப்புவது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.ஜெயலலிதாவை சட்டரீதியில் நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயார்.
காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர முடியாவிட்டால் பேசாமல் பதவி விலகி விடுவது தான் ஜெயலலிதாவுக்கு நல்லது.
ஜெயலலிதாவின் தன்னிச்சையான போக்குக் காரணமாகவே காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்காமல் போய்விட்டது.
கர்நாடகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் கருத்தையும் அம் மாநில முதல்வர் கேட்கிறார். ஆனால் இங்கோ, எதிர்க்கட்சிகள் ஆலோசனைகூறினால் அதை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வதில்லை.
இனிமேலாவது எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதை நிறுத்தி விட்டு அவர்களை மதித்து செயல்படுமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications