கல்யாணி, சுகுமாறன் காட்டுக்குள் செல்கின்றனர்
பெங்களூர்:
நாகப்பாவை மீட்க வீரப்பனைச் சந்தித்துப் பேச பாண்டிச்சேரியைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர்கல்யாணியும், சுகுமாறனும் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
வீரப்பனுடன் பேச காட்டுக்குச் செல்ல பேராசிரியர் கல்யாணியும், சுகுமாறனும் தாமாகவே முன் வந்துள்ளனர். அவர்களை காட்டுக்குச்செல்ல அனுமதிப்போம். ஆனால், அவர்கள் அரசுத் தூதுவர்களாக செல்ல மாட்டார்கள். சுய விருப்பத்துடன் தான் செல்கின்றனர்.
அவர்கள் இந்த உதவியைச் செய்ய முன் வந்திருப்பதை கர்நாடகம் வரவேற்கிறது. அவர்களது சேவையை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.
அரசுத் தூதுவர்களாகத் தான் செல்வோம் என்று அவர்கள் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை. அதே நேரத்தில் தாங்கள் காட்டுக்குள்செல்லும்போது கர்நாடக அதிரடிப்படை தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும் தங்களைத் தொடரக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
நாகப்பாவின் உயிரைக் கருத்தில் கொண்டு இதை ஏற்றுக் கொண்டு விட்டோம். அவர்கள் காட்டுக்குள் போகும்போது தொல்லை தரவேண்டாம் என்று அதிரடிப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வீரப்பனின் கோரிக்கைகள் குறித்து இந்த முறை எந்த உத்தரவாதமும் தரப்பட மாட்டாது. இந்த விஷயத்தில் தமிழக அரசுடன் பேசித் தான்எதையும் செய்ய முடியும் என்றார் கார்கே.
கர்நாடக அரசு கேட்டுக் கொண்டால் தான் காட்டுக்குள் செல்வோம் என சுகுமாறனும் கல்யாணியும் கூறி வருகின்றனர். இந் நிலையில்அவர்கள் சுய விருப்பத்துடன் வேண்டுமானால் போகலாம் என்று கர்நாடகம் கூறியுள்ளது தான் இடிக்கிறது.
அப்படியே கல்யாணியும் சுகுமாறனும் தாங்களாக முன் வந்து காட்டுக்குள் சென்றாலும் அதை அரசுத் தூதுவர்களாக வந்தால் தான்சந்திப்பேன் என்று வீரப்பன் கூறிவிட்டால் இந்த முயற்சி தோல்வியடைய வாய்ப்புள்ளது.
தமிழகம் தூதரை அனுப்பாது- ஜெ.
இதற்கிடையே தமிழகத்தின் சார்பில் வீரப்பனிடம் தூதர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
வீரப்பனிடம் தூது அனுப்புவது குறித்து கர்நாடக அரசிடமிருந்து தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலும்வரவில்லை.
வீரப்பன் இன்னும் கர்நாடக எல்லைக்குள் தான் இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் தமிழக எல்லைக்குள் அவன் வருகிறானா என்பதைதமிழக அதிரடிப்படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
வீரப்பன் வேட்டையை நிறுத்தும் எண்ணம் தமிழகத்திற்கு இல்லை என்றார் ஜெயலலிதா.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications