கர்நாடகா சாலை விபத்தில் 9 தமிழர்கள் பலி
கோலார்:
கர்நாடக மாநிலம் கோலார் அருகே ஒரு வேனும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில்தமிழகத்தின் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 9 தமிழர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 பேர் பெங்களூரில் உள்ள தங்கள் உறவினரின் திருமண விழாவில் கலந்துகொள்ள ஒரு டெம்போ வேனில் சென்றனர்.
பின்னர் அவர்கள் மீண்டும் குடியாத்தம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, கோலார் அருகே எதிரே வந்தலாரியுடன் அவர்கள் வந்த வேன் நேருக்கு நேராகப் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனுக்குள் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 9 பேர் வரை உடல் நசுங்கி உயிரிழந்தனர்.மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து கோலார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் 2 விபத்துகளில் 6 பேர் பலி
இதற்கிடையே தமிழகத்தில் ஏற்பட்ட 2 சாலை விபத்துக்களில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே 30 பேர் ஒரு லாரியில் சென்று கொண்டிருந்தனர். திருவிழாவுக்காக இவர்கள்சென்று கொண்டிருந்தனர்.
மதுக்கூர் அருகே சென்றபோது அந்த லாரி திடீரென்று கவிழ்ந்தது. இதில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் சம்பவஇடத்திலேயே பலியாயினர்.
அதேபோல, திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த அரசு பஸ்சும், நெய்வேலியிலிருந்து திருச்சிக்கு சென்ற லாரியும்பெரம்பலூர் அருகே உள்ள சின்னாறு என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் பலியாயினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.காயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரு விபத்துக்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications