கோவை அருகே ரயில் மோதி தாய்-குட்டி யானைகள் பலி
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
தமிழக, கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாலையாறு பகுதியில் ரயில் மோதி ஒரு பெண் யானையும்அதனுடைய குட்டியும் பரிதாபமாக பலியாயின.
வாலையாறு காட்டுப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள விலங்குகள் தண்ணீர் தேடி நகர்ப்பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன.
இதேபோல பெண் யானை ஒன்றும் அதன் சேய் யானையும் வாலையாறு காட்டிலிருந்து வெளியேறி வந்துகொண்டிருந்தன.
அப்போது, கேரளாவிலிருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருந்த ஒரு ரயில் மோதியதில் இரு யானைகளும்பரிதாபமாக இறந்தன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications