ராணுவத்திடம் திருடி வீரப்பனுக்கு ஏ.கே.47 கொடுத்த முன்னாள் ராணுவ வீரர்
கோயம்புத்தூர்:
ராணுவத்தில் பணிபுரிந்த போது ஒரு ஏ.கே.47 துப்பாக்கியைத் திருடி, பின்னர் அதை சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குவிற்றதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
ஏ.கே.47 துப்பாக்கியை வீரப்பனிடம் விற்றது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரரான பாண்டுரங்கன் என்பவர்கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த 19ம் தேதி தட்ஸ்தமிழ்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ராணுவத்தில் பணிபுரிந்த போது அவர் அந்தத் துப்பாக்கியைத் திருடி தன் வீட்டில் பதுக்கிவைத்திருந்து, பின்னர் அதை வீரப்பனுக்கு விற்றதாக அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 1965ம் ஆண்டு பாண்டுரங்கன் ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் 1971ம் ஆண்டில் வங்கதேசத்துடன் போர்நடந்த போது துப்பாக்கிகளைச் சுத்தம் செய்யும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அப்போது அவர் ஒரு ஏ.கே.47 துப்பாக்கியைத் திருடிக் கொண்டு வந்து தன்னுடைய வீட்டில் பதுக்கி வைத்தார்.
பின்னர் கடந்த 1989ல் அவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று சொந்த ஊரான பெரம்பலூருக்கு அருகே உள்ளசெந்துறைக்குத் திரும்பினார். அங்கு ஒரு பட்டறை அமைத்து தொழில் செய்து வந்தார்.
அவரிடம் ராஜு என்பவன் வேலைக்குச் சேர்ந்தான். இவனுக்கும் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்ததீவிரவாதிகளுக்கும் ஏற்கனவே தொடர்பு உண்டு.
இதையடுத்து செந்தில்குமார், இளவரசன், அறிவழகன் ஆகிய தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்களுக்கும்பாண்டுரங்கனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் தான் வீரப்பனுக்கு ஏ.கே.47 துப்பாக்கி தேவைப்பட்டுள்ளது. அதன்படி வீரபாண்டியன் என்றதமிழர் விடுதலைப் படை தீவிரவாதி மூலம் அந்தத் துப்பாக்கியை வீரப்பனுக்கு அனுப்பி வைத்தார் பாண்டுரங்கன்.
இதற்காக பாண்டுரங்கனுக்கு ஏராளமான பணம் கொடுத்த வீரப்பன் தற்போது அந்தத் துப்பாக்கியைத் தான்எப்போதும் தோளில் போட்டுக் கொண்டு காட்டுக்குள் சுற்றி வருகிறான்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட அறிவழகன், வீரபாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் அளித்த தகவல்களின்அடிப்படையில் தான் பாண்டுரங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாண்டுரங்கனிடமிருந்து ஒரு சிறுத்தைப் புலியின் தோலும் கைப்பற்றப்பட்டது. அசாம் காட்டுப் பகுதிகளில் உள்ளஆதிவாசிகளிடமிருந்து இந்தத் தோலைப் பெற்றதாக பாண்டுரங்கன் கூறினார்.
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சுப்பிரமணியம் முன்னிலையில் பாண்டுரங்கன்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து பாண்டுரங்கன் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications