சென்னையில் ஸ்டிக்கர் நம்பர் ஒட்டிய ஆட்டோக்கள் பறிமுதல்
சென்னை:
சென்னை நகரில் ஸ்டிக்கர் நம்பர் பிளேட்டுகளை பொருத்தியிருந்த ஆட்டோக்களை நேற்று இரவு போலீஸார்அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
ஸ்டிக்கர் நம்பர் பிளேட்டுகளை மாற்றி, பெயின்ட் அடிக்கப்பட்ட நம்பர் பிளேட்டுகள்தான் வாகனத்தில் பொருத்தவேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி பலரும் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளை மாற்றினர். மாற்றி முடித்த பிறகு மெதுவாக மாற்றினால்போதும், மாற்றாத வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று காவல்துறைஅறிவித்திருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் ஸ்டிக்கரில் நம்பர் பிளேட் அமைத்திருந்த ஆட்டோக்கள்மீது போலீஸார் திடீர் நடவடிக்கை எடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
பாரிமுனை, சென்டிரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை உள்ளிட்டமுக்கிய இடங்களில் ஸ்டிக்கர் பொருத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை வளைத்துப் பிடித்து போலீசார் பறிமுதல்செய்தனர்.
இதனால் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
மேலும் சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில இரவு நேர ரயில்களில் வந்த பயணிகள், ஆட்டோக்கள்கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
-->
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications