இலவச மின்சாரத்தை ரத்து செய்வதா?- இளங்கோவன் கொந்தளிப்பு
சென்னை:
தமிழக விவசாயிகள் ஏற்கனவே வேதனையில் நொந்து போயுள்ள நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலான இலவச மின்சாரத் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசின் நிர்வாக சீர்கேட்டினால் கஜானா காலியாகி விட்டது. எங்குபார்த்தாலும் சம்பளமில்லை, ஆட்குறைப்பு, போனஸ் இல்லை என்பதே பேச்சாக உள்ளது.
விவசாயிகள் ஏற்கனவே வறட்சியல் வாடிக் கொண்டிருக்கிறார்கள். காவிரியில் தண்ணீர் கிடைக்காததால், சாகுபடி செய்ய முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு தந்போது இருக்கும் ஒரே ஆறுதல் இலவச மின்சாரத் திட்டம் தான். தற்போது அதிலும் தமிழக அரசு கை வைக்க நினைப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது.
இப்போது கட்டணம் செலுத்தக் கூறும் அரசு, விவசாய பம்ப்செட்டுகளுக்கு மீட்டர் பொருத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.
இலவச மின்சாரத்தை அரசு ரத்து செய்தால் காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி வரும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் இளங்கோவன்.
திமுக கண்டனம்:
இதற்கிடையே, இதுகுறித்து திமுக விவசாய அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் கூறுகையில்,
கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசு கூறியிருப்பது, இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளதையே காட்டுகிறது.
இதைக் கண்டித்து திமுக விவசாய அணி சார்பில் வரும் 27ம் தேதி சென்னையில் விவசாயிகள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் என்றார் ராமலிங்கம்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications