வறட்சி நிவாரணம்: ரூ.1,434 கோடி ஒதுக்க ஜெ. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக உடனடியாக ரூ.1434 கோடியை ஒதுக்க வேண்டும் என்று சென்னைவந்துள்ள மத்திய நிபுணர் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.

மத்திய வேளாண்மைத்துறை இணைச் செயலாளர் ஜோகிந்தர் சிங் தலைமையில் 8 பேர் கொண்ட குழு வறட்சியால்பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட நேற்று சென்னை வந்தது.

இக்குழுவினர் நேற்று பிற்பகல் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

கடுமையான வறட்சி காரணமாக தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தியில் ரூ.3,200அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழகத்திற்கு உடனடியாக ரூ.1,434 கோடி நிதியை அளிக்க வேண்டும்.

அதேபோல, ஐந்தரை லட்சம் டன் உணவு தானியத்தையும் உடனடியாக வழங்க வகை செய்ய வேண்டும் என்றுகூறினார்.

இதுகுறித்து துணைப் பிரதமர் அத்வானி தலைமையிலான குழுவிடம் பரிந்துரை செய்வதாக மத்தியக் குழுவினர்லஜெயலலிதாவிடம் உறுதியளித்தனர்.

இக்குழுவினர் 4 குழுக்களாகப் (இரண்டு இரண்டு பேராக) பிரிந்து இன்று முதல் தமிழகம் முழுவதிலும் 19 வறட்சிபாதித்த மாவட்டங்களைப் பார்வையிடவுள்ளனர்.

வறட்சி நிவாரணமான ரூ.720 கோடி ஒதுக்க வேண்டும் என்று சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச்சந்தித்த ஜெயலலிதா கோரியிருந்தார். இதன் அடிப்படையில் தான் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளைப்பார்வையிடுவதற்காக மத்தியக் குழுவினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+