குஜராத்: கோவிலில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு- -பல பக்தர்கள் சாவு
காந்திநகர்:
குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவிலுக்குள் இன்று மாலை புகுந்த 3 தீவிரவாதிகள்சராமாரியாகச் சுட்டதில் பல பக்தர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் 25 பேர் வரைகாயமடைந்துள்ளனர்.
ஒரு ஊர்வலம் நடத்துவதற்காக அந்தக் கோவிலில் பக்தர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். சுமார் 150 பக்தர்கள்கோவிலில் குவிந்திருந்தனர்.
அப்போது மாலை 4.45 மணி அளவில் கோவிலின் முதல் வாயிலில் புகுந்த 3 தீவிரவாதிகள் நுழைந்தவேகத்திலேயே அங்கிருந்த பக்தர்களை நோக்கிச் சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர்.
தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத பக்தர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர். இதில் 4 பக்தர்கள்அந்த இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 25 பக்தர்கள் வரைகாயமடைந்துள்ளனர். இதில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.
23 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கோவில் வளாகத்தில் பூங்கா, தியான மண்டபம் ஆகியவை உள்ளன.குஜராத்தின் தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுவாமிநாராயணன் கோவில் அமைந்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் காந்திநகரிலிருந்து கமாண்டோ படையினர் அங்குவிரைந்தனர். ராணுவத்தின் ஒரு பட்டாலியனும் கோவிலை சுற்றி வளைத்துள்ளது.
கமாண்டோக்கள் கோவிலின் கதவுகளை மூடிவிட்டு தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் தான் இந்த மாநிலத்தில் மிக பயங்கர மதக் கலவரம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள்கொல்லப்பட்டனர். இந் நிலையில் குஜராத்தில் கோவிலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது மிகப்பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம் மாநிலத்தில் மீண்டும் மதக் கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநில முதல்வர்நரேந்திர மோடி துணைப் பிரதமர் அத்வானியுடன் ஆலோசனை நடத்தினார். அம் மாநிலத்தில் விரைவில் சட்டசபைதேர்தல் நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications