குஜராத் தேர்தல்: உச்ச நீதிமன்ற விசாரணை ஆரம்பம்
டெல்லி:
குஜராத்தில் தேர்தலை ஒத்தி வைக்கும் தேர்தல் கமிஷனின் ஆணையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளுக்கும் 6 முக்கிய தேசிய கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் மதக் கலவரம் நடந்த இடங்களில் மாநில அரசு சரியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை, அங்கு தேர்தல் நடத்தும்சூழநிலை இல்லை என்று கூறி இப்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதை எதிர்த்து ஜனாதிபதியின் ஒப்புதலுடன் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது.
அரசியல் சட்டத்தின் தனித்தனியே அதிகாரங்கள் கொண்ட மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இடையில் ஏற்பட்டு மோதல்அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கமிஷனை எதிர்க்கும் மத்திய அரசின் மனு 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சட்ட பெஞ்சின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கிர்பாலும் இடம் பெற்றுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் 6 மாதக்குக்குள்மீண்டும் கூடியாக வேண்டும். இப்போது தேர்தலை ஒத்தி வைத்தால் அந்த 6 மாத கால இடைவெளி அதிகரித்துவிடும். இது அரசியல்சட்டத்தின் 174வது பிரிவின் கீழ் சட்ட விரோதமானது என்றார்.
ஆனால், அரசியல் சட்டத்தின் 174வது பிரிவு தேர்தல் கமிஷனைக் கட்டுப்படுத்தாது என கமிஷன் ஏற்கனவே கூறிவிட்டது. அரசியல்சட்டத்தின் 324 பிரிவின் கீழ் தேர்தலை எப்போது நடத்துவது என்பதை நிர்ணயிக்கும் முழு அதிகாரம் எங்களுக்கு உண்டு என தேர்தலகமிஷன் கூறிவிட்டது.
இந்த மோதல் குறித்து விளக்கம் தருமாறு தேர்தல் கமிஷனுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும், காங்கிரஸ், பா.ஜ.க, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய 6 அரசியல் கட்சிகளுக்கும் உச்ச நீதிமன்றம்நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
அரசியல் சட்டத்தின் 174 வது பிரிவு பெரிதா அல்லது 324 பிரிவு பெரிதா என்பது தான் இப்போது உச்ச நீதிமன்றத்தில்பிரச்சனையாகியுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications