ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. மத்திய அரசின் வியூகம்! பெரும்பான்மை உள்ளதா? நெருங்கும் நம்பர்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற நாடளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் அந்த எண்ணிக்கையை பெற பல வியூகங்களை வகுத்து வருகிறது பாஜக அரசு. திமுக உள்ளிட்ட கட்சிகளின் முடிவே இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக முயன்றது. அரசியல் அமைப்பு திருத்த மசோதா என்பதால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். இந்த எண்ணிக்கையை எட்ட முடியாததால் அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது.

One Nation One Election Bill Back on Track BJP Eyes Majority Numbers

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா

குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற மத்திய அரசு வியூகம் வகுத்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் மூன்றில் இரண்டு பங்கு அவசியம். தற்போதைய எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 543 உறுப்பினர்கள் கொண்ட லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 363 தேவை. வரும் மழைக்கால கூட்டத்தொடரில் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையை பெறுவதற்கான வியூகங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த முயற்சியில் அரசுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இதற்கு முன்பாக கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததால், நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த கூட்டுக்குழுவின் காலம் தற்போது வரும் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஆகஸ்ட் 10 ஆம் தேதி கூட்டுகுழுவின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர முயற்சி?

இதன்மூலம் கூட்டுக்குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் 10 வரை சமர்பிக்கலாம். எனவே, அரசு இந்த மசோதாவை தேவையான திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர முயற்சிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பல தரப்பட்டவர்களின் கருத்துகளை பெற்றுள்ளது. அண்மையில் கோவாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேபிசி தலைவர் பிபி சவுத்ரி, 2029 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வர முடியும் என்றார்.

எனினும், 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஜனாதிபதி அறிவிக்கை வெளியிடுவார். அதன்பிறகே சட்டமன்றங்களின் பதவிக்காலம் 2034 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படும். அதாவது, 2031 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால், 2034 ஆம் ஆண்டுக்குள் கலைக்கபப்ட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து நடத்தப்படும். 2031ல் வெற்றி பெறும் கட்சி வெறும் 3 ஆண்டுகளில் கலைக்கும் சூழல் உருவாகும் என்று தெரிகிறது.

நம்பர் இருக்கிறதா?

தற்போது நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், 360 என்ற மேஜிக் எண் இல்லை. நாடாளுமன்றத்தின் தற்போதைய எண்ணிக்கை 540 ஆகும். கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மசோதா அனுப்பப்படும் போது, 269 வாக்குகள் அரசுக்கு ஆதரவாகவும் 198 வாக்குகள் எதிராகவும் விழுந்தன. மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு 298 வாக்குகள் அரசுக்கு ஆதரவாகவும் 230 வாக்குகள் எதிராகவும் விழுந்தன.

ஆனால் தற்போது பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. குறிப்பாக 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், 6 சிவசேனா கட்சி எம்பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக திரும்பியுளனர். இவர்கள் தவிர தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் 8 எம்பிக்கள் ஆதரவும் தங்களுக்கு கிடைக்கும் என தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்பார்க்கிறது. ஆனாலும் திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவு அவசியம். அதுபோக சில எதிர்க்கட்சி எபிக்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வைக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும்

ராஜ்யசபாவை பொறுத்தவரை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3/2 பங்கு பெரும்பான்மையை நெருங்கியுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றத்தில் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாஜகவிற்கு இது பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது. ஏனெனில் பல மாநிலங்களில் பாஜகவின் ஆட்சியே உள்ளது. இதனால் இந்த தடையை பாஜக எளிதாக கடக்கும்.

எதிர்க்கட்சிகளின் சவால்:

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு உள்ள உண்மையான சவால் என்பது, எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆதரவை பெறுவதுதான். தற்போதைய அரசியல் சூழலில், இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவின் இந்த மசோதாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த மசோதா கூட்டாட்சிக்கு எதிரானது என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு ஆகும்.

மாநில அரசு இடையில் கவிழ்ந்தால், அங்கு ஜனநாயக நடைமுறைகள் என்ன ஆகும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளன. மத்திய அரசு கடுமையான முயற்சியை எடுத்தாலும் எதிர்க்கட்சிகள் சிலவற்றின் ஆதரவு அல்லது வெளிநடப்பு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்றுவது என்பது அரசுக்கு உள்ள பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+