நாகர்கோவிலில் இளம் பெண் லட்சுமி வீட்டில் இருந்து அழைப்பு.. ஆடிப்போன பெற்றோர்.. சொன்ன ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆசாரிமார் வடக்கு தெருவை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியர் ஆவார். இவரது மனைவி லட்சுமி, பொறியியல் பட்டதாரி ஆவார். லட்சுமிக்கும், சிவபிரகாஷுக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. லட்சுமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.

திருமணம் ஆன புதிதில் மட்டுமல்ல, திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்தும் கூட பெண்கள் புரிதல் பிரச்சனையால் தவறான முடிவெடுக்கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களுமே சில இடங்களில் மனைவியை சரியாக புரிந்து கொள்ள தெரியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். இவர்களின் தவறான முடிவு இவர்களை மட்டுமல்ல, இவர்களின் கை குழந்தை, பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களையும் சேர்த்தே பாதிக்கிறது. அப்படித்தான் நாகர்கோலில் இளம் பெண் லட்சுமி எடுத்த தவறான முடிவு பாதித்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

What happened to the young woman Lakshmi in Nagercoil What do parents say

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆசாரிமார் வடக்கு தெருவை சேர்ந்த 27 வயதாகும் சிவபிரகாஷ் என்பவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி(24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஜூலை 14ம் தேதி அன்று வீட்டில் உள்ள மின்விசிறியில் விபரீத முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தவறான முடிவுக்கான காரணம் என்ன என்பது பற்றி தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் லட்சுமியின் தந்தை முருகன் நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறுகையில், எனது மகள் லட்சுமியை கடந்த 13.2.2021 அன்று சிவபிரகாசுக்கு திருமணம் செய்துகொடுத்தோம். அவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு 7.30 மணியளவில் எனது மகள் இறந்து விட்டதாக தகவல் கொடுத்தார்கள். இதனால் எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+