தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2.0.. திமுகவிடம் கெஞ்சும் காங்கிரஸ்? வசமாக ஆப்பு வைக்கும் ஸ்டாலின்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 20 முதல் தொடங்கவுள்ள விறுவிறுப்பான மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2.0 மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற நீட்டிக்கப்பட்ட கூட்டத்தொடரில், திமுக முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காமல் இந்த அரசியல் சாசன திருத்த மசோதா தோல்வியடைந்தது. லோக்சபாவில் 54 வாக்குகள் குறைவாகப் பெற்றதால் மசோதா முடங்கியது.

Delimitation Bill 2 0

இருப்பினும், இந்த முறை எப்படியும் மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக உள்ளது. இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), சமாஜ்வாடி, உடைந்த திரிணாமூல் காங்கிரஸ் ஜேஎம்எம் ஆகிய பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து நிற்க வாய்ப்பில்லை என்றும் டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாய், 22 எம்பிக்களைக் கொண்டுள்ள திமுகவிடம் ஆதரவு கேட்டு காங்கிரஸ் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் காங்கிரஸ் தேசிய அளவில் ஜெயிக்கவே முடியாத சூழல் ஏற்படும். அதை தடுக்க திமுக தயவு தேவை.

மாறும் நாடாளுமன்ற கணக்குகள்

கடந்த முறை மசோதா தோல்வியுற்றதில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட பாஜக, இந்த முறை எதிர்க்கட்சிகளின் பலத்தைக் குறைக்க பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. அண்மையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்பிக்கள் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் 6 எம்.பி.க்கள் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் என்டிஏ கூட்டணியின் பலம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மறுபுறம், தென் மாநிலங்களின் எதிர்ப்பைச் சமாளிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு புதிய ஃபார்முலாவை முன்வைத்துள்ளார். அதன்படி, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் லோக்சபா இடங்களை 50% வரை சீராக உயர்த்தும் உத்தரவாதத்தை வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இதன் மூலம் லோக்சபா எம்.பி.க்களின் எண்ணிக்கை 543-லிருந்து 850 ஆக அதிகரிக்கும்.

திமுகவின் மௌனமும் காங்கிரஸின் தவிப்பும்!

காங்கிரஸ் மற்றும் திமுக இடையே சமீபகாலமாக தொகுதிப் பங்கீடு மற்றும் சில அரசியல் காரணங்களால் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்களை திமுக புறக்கணித்ததைத் தொடர்ந்து, பாஜக தலைமை நேரடியாக திமுகவை அணுகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் எந்தக் காலத்திலும் குறையாது என்ற சட்டபூர்வ உத்தரவாதத்தை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

இதனால், மசோதாவுக்கு எதிராக இன்னும் திமுக அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் அறிவிக்காமல், அனைத்துக் கட்சிக் கூட்டம் வரை மௌனம் காத்து வருகிறது. திமுகவின் இந்த மௌனம் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் 22 எம்பிக்கள் மசோதாவை ஆதரித்தாலோ அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தாலோ, அது பாஜகவுக்கு சாதகமாக முடிந்துவிடும். இதனால், திமுகவை சமாதானப்படுத்தவும், தங்களுக்கு ஆதரவாக நிற்க வைக்கவும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு

மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்த மசோதாவுக்கு நிபந்தனை ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேசுகையில், எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் 50% இடங்கள் சீராக அதிகரிக்கப்பட்டால், மசோதாவை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்போம் எனத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சரத் பவார் தரப்பு நடத்திய ரகசியக் கூட்டங்களும் இதையே உணர்த்துகின்றன.

ஆனால், உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜார்கண்டின் ஜேஎம்எம் ஆகிய கட்சிகள் இன்னும் காங்கிரஸுடன் ஓரளவு இணக்கமாக இருந்தாலும், தொகுதி மறுசீரமைப்பால் வட மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் பலத்தை பலவீனப்படுத்த பாஜக சதி செய்வதாகக் குற்றம் சாட்டுகின்றன.

ப.சிதம்பரத்தின் பகிரங்க எச்சரிக்கை

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இதற்கு எதிராக எச்சரித்துள்ளார். திமுக மற்றும் என்சிபி ஆகிய கட்சிகள் மத்திய அரசின் ஆசை வார்த்தைகளுக்கு இணங்காமல், உறுதியாக நின்று எதிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பது மாநிலங்களின் சுயாட்சிக்குச் செய்யும் துரோகம் என்றும், இது முழுக்க முழுக்க தேர்தல் ஆதாயத்திற்காகத் தொகுதிகளை மாற்றியமைக்கும் முயற்சி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+