போரூர் - பூந்தமல்லி மெட்ரோ திறப்பு விழா.. சென்னையில் ஒரே மேடையில் மோடி - விஜய்.. அங்கேதான் விஷயமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இன்னொரு முக்கியமான வழித்தடம் விரைவில் திறக்கப்பட உள்ளது.. போரூர் முதல் பூந்தமல்லி வரையிலான இந்த புதிய வழித்தடம் பயன்பாட்டுக்கு வரப்போகிறது. இந்த புதிய மெட்ரோ சேவை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நிகழ்ச்சி தொடர்பாக ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதுகுறித்து நமக்கு ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவலும் கிடைத்துள்ளது.

சென்னை போரூர்-பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்க இம்மாதம் 11-ந்தேதி சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி. இந்த சேவையை இவர் மட்டுமே தொடங்கி வைப்பதாகத் தான் முதலில் திட்டமிடப்பட்டதாம்.

Chennai Metro Opening

தமிழக முதலமைச்சர் விஜய்

இப்போது தமிழக முதலமைச்சர் விஜய்யும் பிரதமர் மோடியோடு இணைந்து தொடங்கி வைப்பதாக ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கு ஒரு பின்னணியும் சொல்லப்படுகிறது.

அதாவது, தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொண்டதை ஆரம்பத்திலிருந்தே டெல்லி ரசிக்கவில்லை. விஜய் மீது கோபமாகவும் கூட டெல்லி இருந்துள்ளது. அதனை தணிப்பதற்காகத்தான், இப்போது வரை "இந்தியா கூட்டணியில்" விஜய் இணையாமல் இருந்து வருகிறாராம்.. 2 நாட்களுக்கு முன்பு சத்தியமூர்த்திபவனில் கூட்டப்பட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் கலந்து கொண்டதை அதிகாரப்பூர்வ இந்தியா கூட்டணியின் கூட்டமாக கருதப்படவில்லை.

பாஜகவுடன் மறைமுக உறவு

பாஜகவுடன் மறைமுக உறவை விஜய் வளர்த்து வருகிறாரோ? என்பது ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் சந்தேகமாக உள்ளது.. அதனை வெளிப்படையாக ஊதி பெரிதாக்க வேண்டும் என்று தான், மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நிகழ்வில் விஜய்யும் இருக்க வேண்டும் என அரசியல் ரீதியாக திட்டமிட்டு முடிவு எடுத்துள்ளாதாம் டெல்லி.

பிரதமர் மோடி வரும்போது புரோட்டகால்படி முதல்வரும் பங்கேற்க வேண்டும் என்பது மரபு என அரசு தரப்பிலோ அல்லது தவெக தரப்பிலோ அந்த சமயத்தில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டாலும் கூட, பாஜக தலைமையுடன் விஜய் நெருக்கமாகத்தான் இருக்கிறார் என்பதை தமிழகத்திற்கும் காங்கிரஸ்சுக்கும் மெசேஜ் சொல்வதுதான் இந்த முடிவின் அரசியல் என்கிறார்கள் பாஜகவின் தரப்பினர்.

பிரதமர் மோடி வருகை

இதற்கிடையே மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமர் மோடி, ஐ.ஐ.டி. வளாகத்திலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தியானத்தில் ஈடுபடவும் இருக்கிறாராம்.

அதேசமயம், பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் மோடியின் பாதம் பதிய வேண்டும் என்பதற்காக, கமலாலயம் வர வேண்டும் என தமிழக பாஜக தரப்பிலிருந்து, பாஜகவின் தேசிய தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த கோரிக்கைக்கு இப்போது வரை க்ரீன் சிக்னல் இன்னும் கிடைக்கவில்லையாம்.

காங்கிரஸ் கூட்டணி

ஒருபக்கம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, இப்போது இந்தியா கூட்டணியிலும் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார் விஜய்.. இன்னொரு பக்கம் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் அவர் பங்கேற்க உள்ள சூழல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

அப்படியென்றால் பாஜக - விஜய் நெருக்கம் என்ற பேச்சு வலுப்பெற்றால், காங்கிரஸின் நிலை என்னவாகும்? பிரதமர் மோடியும் விஜய்யும் ஒரே மேடையில் தோன்றி, அது பாஜக-விஜய் நெருக்கத்துக்கான அரசியல் சிக்னலாக பார்க்கப்பட்டால்.. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் அடுத்து என்ன செய்யும் என்பதுதான் இப்போது எழும் கேள்வி.

ஒருவேளை விஜய்யிடம் இது குறித்து விளக்கம் கேட்குமா? கூட்டணிக்குள் தனது நிலைப்பாட்டை கடுமையாக்குமா? அல்லது இதை வெறுமனே ஒரு அரசு நிகழ்ச்சியாக மட்டுமே எடுத்துக்கொண்டு அமைதியாக கடந்து செல்லுமா? என்றெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+