காசாவிற்காக உயிர் தியாகம்.. விசாரணையில் ஓமன் துணை விமானி வாக்குமூலம் - பகீர் தகவல்
துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்தும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமியிடம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தீவிர விசாரைண மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிய தகவல் கிடைத்துள்ளது. காசாவிற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதலை அவர் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு செப்டம்பர் 30ம் தேதி 'ஃப்ளைதுபாய்' விமானம் பயணித்தது. இந்த விமானத்தை ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கடத்தி விபத்துக்குள்ளாக்க திட்டமிட்டு இருந்தார். தற்போது ஹமாம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த விசாரணையில் இஸ்ரேல் நாட்டின் அதிகாரிகளுடன் இணைந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாத் மற்றும் இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்புக்கான உளவுப்பிரிவான 'சின் பெட்' அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தான் ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளன. விசாரணையில் அவர் கூறிய தகவல்கள் பற்றி இஸ்ரேல் நாட்டில் உள்ள சேனல் 12 என்ற செய்தி நிறுவனம் முக்கிய விவரத்தை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் விசாரணையின்போது ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி என்ன சொன்னார்? என்பது பற்றிய விவரத்தை பகிர்ந்துள்ளது.
அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ''காசா போருக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டு தான் இந்த விமான கடத்தல் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த விமானத்தை விபத்தில் சிக்க வைத்து தியாகியாக (Martyr) மாறவேண்டும் என்று நினைத்து இந்த சதி செயலை செய்துள்ளார்.
இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு விமானங்களை இயக்கும் நிறுவனங்களை தேடி வந்துள்ளார். அதன்படி தான் 'ஃப்ளைதுபாய்' நிறுவனத்தில் பணிக்கு சேர விண்ணப்பம் செய்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்அவிவ் நகருக்கு விமானத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
அப்போது விமானத்தை கடத்தி டெல்அவிவ் நகரில் உள்ள பென்குரியன் விமான நிலையத்தில் வைத்து விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டார். ஆனால் விமான நிறுவனத்தில் புதிதாக பணியில் சேர்ந்ததாலும் அவர் அதனை செய்யவில்லை. முதலில் விமான நிறுவனத்தின் நம்பிக்கையை பெறுவதோடு, டெல்அவிவ் விமான நிறுவனத்தை சிலமுறை பார்த்து கொண்டு இந்த தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று நினைத்துள்ளார். இதனால் தான் அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்அவிவ் நோக்கி விமானத்தை இயக்கி இருந்தாலும் அமைதியாக இருந்துள்ளார்.இதனை விசாாரணையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள 2 இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்.
அதேபோல் இந்த விமான கடத்தல் மற்றும் தாக்குதலுக்காக ஹமாம் அல் ஹமாமி பல ஆண்டுகளாக அவர் திட்டமிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான பல நாடுகளுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டுள்ளதை இஸ்ரேல் உளவுத்துறையின் மொசாட் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் இஸ்ரேலில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
காசா என்பது பாலஸ்தீனத்தில் அமைந்துள்ளது. பாலஸ்தீனமும், இஸ்ரேலும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே மோதல் உள்ளது. 2023ம் ஆண்டில் இருந்து சுமார் 2 ஆண்டுகளாக போர் நடந்தது. காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதனால் காசாவிற்காக இஸ்ரேலை பழிவாங்க ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





Click it and Unblock the Notifications
