சி விஜயபாஸ்கர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றதற்கு எதிராக வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் எம்.ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் ஒரு அணி உருவாகியது. எடப்பாடி திமுகவோடு கூட்டணி வைக்க முயன்றதாகவும் இதனால் தான் நாங்கள் விஜய் ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் கூறினர். மேலும் அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு விஜய்யின் தவெகவில் இணைந்தனர்.

C Vijayabaskar MR Vijayabaskar to file counter affidavits Madras High Court orders AIADMK MLAs resign

விஜயபாஸ்கர்கள் ராஜினாமா

ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி மற்றும் கரூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்களான சி விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். சபாநாயகரும் இரு விஜயபாஸ்கர்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் இரு எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது, இருவரின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறானது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மேலும் சபாநாயகர் இந்த விவகாரத்தில் இயந்திரத் தனமாக முடிவு எடுத்து இருப்பதாகவும், எனவே இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், சபாநாயகர் முடிவு அரசியல் சாசனம், இயற்கை விதிகளுக்கு எதிரானது என்றும், இந்த மனு முடியும் வரை கரூர் மற்றும் விராலிமலை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் தர்மாதிகாரி, அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக எம்.ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+