போன்ல யாரு? வீடியோ காலில் விம்மிய கடைசி வார்த்தை! கும்பிட்டு கெஞ்சிய சந்தியா! நொடியில் அடங்கிய கதறல்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.. இதற்கு காரணம் சந்தேகம்... எப்போதுமே சந்தேகம் ஒரு குடும்பத்திற்குள் நுழையும்போது, அது வெறும் மனஸ்தாபத்தோடு நின்றுவிடுவதில்லை.. மாறாக, நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே அடித்து நொறுக்கி விடுகிறது... ஒருமுறை இந்தப் பேய் குடிபுகுந்துவிட்டால், சின்னச் சின்ன விஷயங்களை கூடக் கொடூரமான கண்ணோட்டத்துடன் பார்க்கத் துணியும். கடைசியில் விலைமதிக்க முடியாத உயிரையும் காவு வாங்க தோன்றும்.. அப்படியொரு பயங்கரம்தான் ஆந்திராவில் நடந்துள்ளது.
குண்டூர் மாவட்டம் தெனாலி அருகே உள்ளது அங்கலக்குடுரு என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் நரேந்திர பாபு.. இவருக்கும் பல்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா ராணி என்பவருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இப்போது 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சந்தியா - நரேந்திர பாபு
நரேந்திர பாபு தெனாலி செஞ்சு பேட்டை பகுதியில் அடகுக் கடை வைத்து நடத்தி வருகிறார்.. ஆனால் திடீரென குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். இதனால் குடும்பத்திற்கு தேவையான பணத்தை தராமல், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.. அத்துடன் தண்ணி அடித்துவிட்டு வந்து சந்தியாவை அடித்து துன்புறுத்துவதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
நாளுக்கு நாள் கணவரின், சண்டையும், தகராறும் அதிகமாகிவிட்டதால் நொந்து போன சந்தியா, சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக்கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.. இதையறிந்த நரேந்திர பாபு, மாமியார் வீட்டிற்கு நேரில் சென்று, இனிமேல் சந்தியாவிடம் எந்த தகராறும் செய்ய மாட்டென் என்று பெரியவர்கள் முன்னிலையில் சத்தியம் செய்துள்ளார்.. மேலும் சமாதானம் பேசி, சந்தியாவை மறுபடியும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
போன்ல யாரு - சந்தேகப்பட்ட கணவர்
கணவர் வீட்டுக்கு வந்த சந்தியா ராணி செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்தார். இதனால் நரேந்திர பாபுவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுந்தது.. அதேசமயம் போனில் யாருடனோ மனைவி பேசுவதம் பிடிக்கவில்லை.. அதனால் சந்தியாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்த நரேந்திர பாபு, இதற்காகவே ஒரு பெரிய கத்தியை வாங்கி வந்து வீட்டில் மறைத்து வைத்தார், .
கடந்த ஜூலை 14ம் தேதி இரவு, நரேந்திர பாபு வழக்கம்போல் தண்ணி அடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.. "நீ யாருடன் இவ்வளவு நேரம் போனில் பேசிக் கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டு ஆத்திரமடைந்தார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து சந்தியாஐவ சரமாரியாக வெட்டினார்..
கையெடுத்து கெஞ்சிய சந்தியா
என்னை எதுவும் செய்யாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டு சந்தியா கெஞ்சியும், சிறிதும் இரக்கம் காட்டாமல் நரேந்திர பாபு அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டார்..
பிறகு போலீஸாரிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் நரேந்திர பாபு தானாகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்தார்.. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்
ஆனால்,கொலை நடந்த அன்று காலையில், சந்தியா தன்னுடைய பெற்றோரை வீடியோ காலில் அழைத்து பேசியிருக்கிறார்.. "எனது கணவனின் நடத்தை இன்னும் மாறவில்லை.. அவர் என்னை எப்போது வேண்டுமானாலும் கொலை செய்து விடுவார்.. பயமா இருக்கு" என்று அழுதுகொண்டே பேசினாராம்.. சந்தியா பயந்தபடியே அதே நாள் இரவு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்..
ஒருவேளை சந்தியா சொன்னதுமே, அவர்களது பெற்றோர் உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், சந்தியாவின் உயிர் பிழைத்திருக்குமே என்று அந்த பகுதி மக்கள் சோகத்துடன் கூறுகிறார்கள்...!!


Click it and Unblock the Notifications
