பெங்களூர் காவிரி கூட்டம்: தமிழகம் புறக்கணித்தது
சென்னை:
பெங்களூரில் இன்று காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது. இதை தமிழகம் புறக்கணித்தது.
தமிழகத்துக்கு தண்ணீர் விடுவது குறித்து விவாதிக்க மத்திய நீர் வளத்துறைச் செயலாளர் ஏ.கே. கோஸ்வாமிதலைமையில் காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் பெங்களூரில் இன்று காலை நடந்தது. வழக்கமாகடெல்லியில் நடக்கும் இந்தக் கூட்டம் இம்முறை பெங்களூரில் கூட்டப்பட்டது.
ஆனால், இந்தக் காவிரிக் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் தமிழகம் பங்ற்ேகவில்லை. இதனால், தமிழகம்தவிர்த்து கர்நாடக, கேரள, பாண்டிச்சேரி மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்றையகூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த கோஸ்வாமி நிருபர்களிடம் பேச மறுத்துவிட்டார். பின்னர் அவரதுதலைமையிலான 7 பேர் குழு மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றது.
இந்தக் குழு இன்று கபினி, கிருஷணராஜ சாகர் அணைகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகின்றனர்.நாளை மேட்டூர் அணையை இக் குழுவினர் பார்வையிடுகின்றனர்.
பெங்களூர் காவிரிக் கண்காணிப்புக்கு குழுக் கூட்டத்தை புறக்கணித்தது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர்ஜெயலலிதா கூறுகையில்,
காவிரிப் பிரச்சினை தற்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. எனவே அணைகளில் எவ்வளவு நீர்உள்ளது என்பது குறித்து காவிரி கண்காணிப்பு குழு விவாதம் செய்வது சட்டவிரோதமாகும்.
இதையும் மீறி கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்தினாலோ அதில் பங்கேற்றாலோ அது நீதிமன்ற அவமதிப்பாகஅமையும்.
இதுகுறித்து மத்திய அரசுக்கும், கண்காணிப்புக் குழுவுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இதற்குப் பிறகும்கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடந்தாலும் அக்கூட்டத்தில் தமிழக அரசு கலந்து கொள்ளாது.
மேட்டூரில் இப்போது உள்ள நீரை அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே பாசனத்துக்குத் திறந்துவிட முடியும். 11வதுநாள் மேட்டூர் வறண்டுவிடும் என்றார் ஜெயலலிதா.
கேலிக்கூத்தான கர்நாடக சட்டசபை கூட்டம்:
இதற்கிடையே இன்று அவசர சட்டசபைக் கூட்டத்தை கர்நாடகம் கூட்டியது. இன்று ஒருநாள் நடந்த இக் கூட்டத்தில்காவிரி, வறட்சி, வீரப்பன் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருந்தன.
ஆனால், இக் கூட்டத்தில் காவிரி குறித்து நேரடியாகப் பேசினால் நீதிமன்ற அவமதிப்பாக அமையும் என்பதால்அது குறித்துப் பேச வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து அவை கூடியவுடன் எந்த விவாதமும் மீண்டும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
அக்டோபரில் அவையைக் கூட்டி காவிரி, வீரப்பன் விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என்று அரசு முடிவுசெய்துள்ளது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications