இலவச மின்சாரம் ரத்து ஆகாது: அரசு விளக்கம்
சென்னை:
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லைஎன்று மாநில மின்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக நேற்று செய்தி பரவியது.இதற்கு நைனார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
இந்த செய்தியில் உண்மையில்லை. அம்மாதிரியான திட்டம் தமிழக அரசிடம் இல்லை.
தமிழகத்தில் தற்போது 15 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில்ஒன்றரை லட்சம் விவசாயிகள் ஒரு குதிரை சக்தி திறன் மின்சாரத்திற்கு ஆண்டுக்கு ரூ.250 வீதம் கட்டி வருகிறார்கள்.
இதுபோக 185 விவசாய கூட்டுறவு சங்கங்கள் அரசிடம் பணம் கட்டி மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.இவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ.3.25 வசூலிக்கப்படுகிறது.
இந்த கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஏற்கனவே ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு வசூலிக்கப்படும்மின் கட்டணமே தங்களிடம் வசூலிக்கப்பட வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்துஅரசு இவர்களுக்கு வழங்கும் மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.2.25 ஆகக் குறைத்துள்ளது.
இந்தத் தொகையை பல பேர் இன்னும் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இந்த நிலுவைத் தொகையைத்தான் கட்டுமாறு கோரி விவசாயிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.
மற்றபடி இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி வரும் விவசாயிகள் அனைவருக்கும் பணம் செலுத்தக் கூறிநோட்டீஸ் அனுப்பவில்லை என்றார் நைனார் நாகேந்திரன்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications