நாளை "பாரத் பந்த்"
மும்பை:
குஜராத்தில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் தாக்கப்பட்டதைக் கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் சிவசேனா ஆகிய இந்து அமைப்புகள் நாளை (வியாழக்கிழமை) நாடு தழுவிய பந்த்திற்கு தனித்தனியாக அழைப்புவிடுத்துள்ளன.
இந்த பந்துக்கு ஆதரவு தருமாறு அனைத்து மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் கிளைகளும் மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளன.
இந்த பந்த்தின் போது பெரும் வன்முறை நடக்கவும் வாய்ப்பிருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் பிரவீனதொகாடியா கூறியுள்ளார். மேலும் நாட்டில் உள்ள இஸ்லாமிய பள்ளிகளையும், இஸ்லாமியபல்கலைக்கழகத்தையும் மூட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இவரது பேச்சையடுத்து இந்த பந்துக்கு ஆதரவு தர மாட்டோம் என பா.ஜ.க. அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் நக்வி கூறுகையில், இந்த பந்த் வி.எச்.பியால் தான் நடத்தப்டுகிறது.இதற்கு பா.ஜ.க. ஆதரவு தராது என்றார்.
இந்துக்கள் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க மாட்டார்கள். பொறுமைக்குரிய அனைத்து எல்லைகளையும்இந்தத் தாக்குதல் மீறச் செய்துவிட்டது என்று சிவ சேனா அமைப்பு கூறியுள்ளது.
துரதிருஷ்டவசமாக நாம் எப்போதுமே பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தொடர்ந்து இரையாகிக் கொண்டேஇருக்கிறோம் என்றுசிவ சேனா தலைவரான பால் தாக்கரே கூறினார்.
நாடு தழுவிய பந்த்திற்கு வி.எச்.பி. அமைப்பு தான் முதன் முதலில் அழைப்பு விடுத்தது.
இதைக் கடுமையாகக் கண்டித்த சிவ சேனா அமைப்பு, நாடு கடுமையான சோதனையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது இந்தியாவில் உள்ள அனைத்து இந்து அமைப்புகளும் ஒன்றாகக் கூடவேண்டும்.
இவ்வாறு தனியாக பந்த்திற்கு அழைப்பு விடுவது கண்டனத்திற்குரியது என்றும் வி.எச்.பி. அமைப்பை சிவ சேனாகண்டித்துள்ளது.
குஜராத்தில் இன்று காங். பந்த்:
இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் அம்மாநில காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்த பந்த் இன்று நடந்தது.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.
பந்த்தையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பந்த் அமைதியாகநடந்து முடிந்தது.
சிறுபான்மை முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் ஆயுதமேந்திய போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காங்கிரஸ் பந்த் முடிவடைந்துள்ள நிலையில் நாளை பாரத் பந்த்தை சந்திக்கிறது குஜராத்.
நாளை விஸ் ஹிந்து பரிஷத் நடத்தும் பாரத் பந்த்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
கோவிலில் சோனியா:
இந்நிலையில் இன்று காந்திநகர் வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாக்குதலுக்குள்ளான சுவாமிநாராயணன் கோவிலைப் பார்வையிட்டார்.
பின்னர் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்துஅவர்களுக்கு ஆறுதல் கூறினார் சோனியா.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications