உலக நாடுகள் கண்டனம்
காந்திநகர்:
குஜராத் சுவாமி நாராயணன் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை பல்வேறு உலக நாடுகளும்கடுமையாகக் கண்டித்துள்ளன.
தாக்குதல் குறித்துக் கேள்விப்பட்டதும் அமெரிக்க மக்களாகிய நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இந்தக்கோடூரமான தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அமெரிக்க மக்கள் சார்பாகத்தெரிவிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ரிச்சர்ட் பவுச்சர் கூறினார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லீம்களும் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.வழிபாட்டு தலத்தில் நுழைந்து தாக்குதல் நடத்துவதை முஸ்லீம் உள்பட எந்த மதமுமே ஏற்றுக் கொள்ளாது என்றுகூறிய அவர்கள், குஜராத் மக்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதே போல் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சரான ஜாக் ஸ்டிராவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளார். மதவாத தீவிரவாதத்தின் மூலம் எப்போதுமே வன்முறைக்குத் தீர்வு காண முடியாது என்று அவர்கூறினார்.
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதத்தைத் தூண்டி வரும் பாகிஸ்தானும் கூட இந்தத் தீவிரவாதத் தாக்குதலைக்கண்டித்துள்ளது. கோவிலில் தாக்குதல் நடத்தியிருப்பது கொடூரமானது என்று அந்நாட்டு வெறியுறவுத்துறைஅமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
இது போலவே வேறு பல உலக நாடுகளும் குஜராத் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதைக்கண்டித்துள்ளன.
இதற்கிடையே, இந்தத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வன்முறை எதுவும் ஏற்படாமல் அம்மாநில மக்களைக்காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டிஇன்டர்நேஷனல் கேட்டுக் கொண்டுள்ளது.
மோடியின் யாத்திரை ஒத்திவைப்பு:
இந் நிலையில் கடந்த சில வாரங்களாக மாநில முதல்வர் நரேந்திர மோடி நடத்தி வந்த கெளரவ் யாத்திரை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
தேர்தலை ஒட்டி இந்த யாத்திரையை நடத்தி வந்தார் மோடி.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications