மென்மை vs
ராமநாதபுரம்:
மிக மென்மையான அரசியல் அணுகுமுறை கொண்ட சோ.பாலகிருஷ்ணனை தமிழக காங்கிரஸ் தலைவராகநியமித்துள்ள சோனியா காந்தி, மிகவேகமாக செயல்படும் இளங்கோவனை செயல் தலைவராக நியமித்துள்ளார்.
இளங்கோவனுக்கு சோ.பாவுக்கு இணையான அதிகாரம் கொண்ட பதவி தரப்பட்டுள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சியில் மேலும் குழப்பங்கள் ஏற்படப் போவது நிச்சயம்.
சோ.பா என்று நண்பர்களாலும், அரசியல் தோழர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் சோ.பாலகிருஷ்ணன்ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூரில் 1936ல் பிறந்தவர் சோ.பா. இவரது தந்தை பெயர் சோனைமுத்து தேவர்.தாயார் பெயர் மீனாள். இவர்களது 11- வது மகன் தான் சோ.பா.
அரசியலுக்கு வருவதற்கு முன் ஒரு வருடம் பரமக்குடியில் உள்ள ஏ.வி. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப்பணியாற்றினார் சோ.பா. அதன் பின்னர் அரசியலில் ஆர்வம் ஏற்படவே பள்ளி ஆசிரியர்பதவியை உதறி விட்டுகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
பின்னர் 1977 முதல் 99 வரை 3 முறை முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகுகடலாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் செயல்பட்டார்.
அரசியல் எதிரிகளிடமும் அன்பாக நடந்து கொள்ளும் போக்குடையவர். மென்மையான போக்கைக்கடைப்பிடிப்பவர்.
காங். வேகம் குறைக்குமா?:
அரசியல் அரங்கில் மீண்டும் செல்வாக்கு பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் வேகத்தை இவரது மென்மையானஅணுகுமுறை குறைக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டபோது கோஷ்டிப் பூசலை சமாளிக்கவே அவருக்குநேரம் சரியாக நேரம் இருக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் கோஷ்டிகளை திறம்பட சமாளித்த இளங்கோவன் அருமையாக அரசியல்பண்ணவும் ஆரம்பித்தார். குறிப்பாக காங்கிரஸ் குறித்தும், சோனியா காந்தி குறித்தும் அதிமுக தரப்பில் யார்அறிக்கை விட்டாலும், விமர்சித்தாலும் சூடாக பதிலடி கொடுத்தார்.
கோஷ்டிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார், ஆனாளப்பட்ட வாழப்பாடி ராமமூர்த்திக்கே விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பினார்.
காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒரு தெம்பை உருவாக்கினார் இளங்கோவன். மக்கள் மத்தியிலும் காங்கிரஸ்கட்சி குறித்த புதிய இமேஜ் உருவாகியுள்ளதற்குக் காரணம் இளங்கோவன்தான்.
இந் நிலையில் ஜி.கே.வாசனின் நெருக்குதல் காரணமாக தமாகாவைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் புதியதலைவராக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கு சமமான அந்தஸ்துடன் இளங்கோவன், செயல் தலைவராகதொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியான குணம் கொண்ட சோ.பாலகிருஷ்ணனுக்கு பெரிய அளவில் பெயரும், சாதனைகளும் இல்லாததுகுறிப்பிடத்தக்கது. 1996ம் ஆண்டில் திமுக அரசுக்கு எதிராக செயல்படாத ஒரு தலைவர் தேவை என்ற நிலையில்சோ.பாவை எதிர்க்கட்சித் தலைவராக்கினார் மூப்பனார்.
அணுகுமுறையில் இப்படி எதிரெதிர் துருவங்களாக விளங்கும் சோ.பாவும் இளங்கோவனும் எப்படி இணைந்துகட்சியை நடத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications