தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்யும் மத்திய நிபுணர் குழுவுக்கு காலிப் பானை வரவேற்பு
சேலம்:
மத்திய நிபுணர் குழுவினர் 4 குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் வறட்சி பாதிப்பு குறித்து நேரில் சென்று ஆராயந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் சென்னை வந்த அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினர். பின்னர்நேற்றே 4 குழுக்களாகப் பிரிந்து மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
குழு 1:
திட்டக் குழு உறுப்பினர் முண்டா தலைமையிலான முதல் குழு தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிக்குச் சென்றுள்ளது. நேற்றுஆரம்பித்த ஆய்வை இன்றும் அவர்கள் தொடர்ந்தனர். தஞ்சை காவிரிப் படுகை விவசாயிகளுடன் பேச்சு நடத்சிய அவர்கள்வறண்டு கிடக்கும் கண்மாய்கள், விவசாயக் கிணறுகளை அவர்கள் பார்வையிட்டனர். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில்இந்தக் குழு சுற்றுப் பயணம் செய்து வருகிறது.
குழு 2:
மத்திய வறட்சிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜே.ஆர். மீனா தலைமையிலான குழுவினர் மதுரை மாவட்டத்தில் நேற்றுஆய்வு நடத்தினர். இன்று இவர்கள் அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வறட்சி பாதிப்பை அளவிட்டுவருகின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் இவர்கள் புள்ளி விவரங்களை கேட்டுப் பெற்று வருகின்றனர்.
குழு 3:
மத்திய விவசாயத்துறை துணைச் செயலாளர் ஜோகிந்தர் சிங் தலைமையிலான குழுவினர் நேற்று கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தனர். இன்று அவர்கள் கரூர், ஈரோடு மாவட்டங்களுக்குச் சென்று விசாயிகளை சந்தித்து நிலைமையை நேரில்ஆராய்ந்து வருகின்றனர்.
குழு 4:
மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் நளினி பதக் தலைமையிலான குழுவினர் நேற்று வேலூர் மாவட்டத்தில் நேரில் ஆய்வுநடத்தினர். இன்று அவர்கள் திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து வறட்சி பாதிப்பை ஆராய்ந்துவருகின்றனர்.
பல இடங்களில் இந்தக் குழுவினரிடம் மக்கள் முண்டியடித்துக் கொண்டு குறைகளைக் கூறினர். சில இடங்களில் இவர்களைமக்கள் வசைபாடினர். சேலம் மாவட்டத்தில் இந்தக் குழுவினரை பெண்கள் காலிப் பானைகளைக் காட்டி வரவேற்றனர்.
மிகக் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம் இதிலிருந்து மீள மத்திய அரசிடம் 1,434 கோடி ரூபாய் நிதியுதவிகோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications