உஷார் நிலையில் தமிழக போலீஸ்: பல கோவில்களில் மெட்டல் டிடெக்டர்கள்
சென்னை:
குஜராத்தில் சுவாமி நாராயணன் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தமிழக போலீசார் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
குஜராத் தாக்குதல்நடந்த சில மணி நேரத்திலேயே தமிழகம் முழுவதும் கண்காணிப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து காவல்நிலையங்களுக்கும் மாநில உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா உத்தரவிட்டார்.
காவல்துறை டி.ஜி.பி. நெயில்வால் உடனடியாக அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள், டி.எஸ்பிக்கள், நகர கமிஷ்னர்களுடன்தொலைபேசியில் பேசி பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டார்.
மாநில உளவுப் போலீசாரையும் அரசு முடுக்கி விட்டுள்ளது.
இது குறித்து நெயில்வால் கூறுகையில், போலீசாரை ரெட் அலெர்ட்டுக்குக் கொண்டு வந்துள்ளாாேம். அனைத்து மத வழிபாட்டுத்தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். பதற்றம் நிறைந்த பகுதிகளில் கண்காணிப்பையும் போலீஸ் ரோந்தையும்அதிகரித்துள்ளோம் என்றார்.
மீனாட்சி அம்மன் கோவில் மெட்டல் டிடெக்டர்:
குஜராத் சம்பவத்தையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீசார் மெட்டல்டிடெக்டர்களைப் பொறுத்தியுள்ளனர்.
பக்தர்கள் அனைவரையும் சோதனையிட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.
கோவிலுக்குப் பாதுகாப்பு வழங்க இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் சிறப்புப் படைஅமைக்கப்பட்டுள்ளது. சாதாரண உடையிலும் போலீசார் பக்தர்களை கண்காணித்து வருகின்றனர்.
இரவிலும் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ராமேஸ்வரம் ராமநாதசாமிகோவிலுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில், கபாலீஸ்வரர் கோவில், பழனி முருகன் கோவில், திருச்சி மலைக்கோட்டை(மலைப் பகுதி முழுவதிலும் போலீஸ் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது), ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட முக்கியக்கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களை சோதனையிட்டு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, பிற வழிபாட்டுத்தலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதுமே வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பபுத் தர மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலஅரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications