குஜராத்தில் வாஜ்பாய்
அகமதாபாத்:
குஜராத் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மாலத்தீவுகளில் பயணம்மேற்கொண்டிருக்கும் பிரதமர் வாஜ்பாய் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று இந்தியா திரும்பினார்.
சுவாமி நாராயணன் கோவில் தாக்கப்பட்ட விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனேயே மாலத் தீவுகளிலிருந்துதுணைப் பிரதமர் அத்வானியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் வாஜ்பாய்.
இன்று பிற்பகல் மாலத்தீவுகள் தலைநகர் மாலேயில் இருந்து சிறப்பு விமானத்தில் கிளம்பிய அவர் நேரடியாகஅகமதாபாத் விமான நிலையம் வந்து இறங்கினார். அங்கிருந்து நேராக காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன்கோவிலுக்குச் சென்று தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
அங்கு நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய், இந்தத் தீவிரவாதிகளை யார் பின்னால் இருந்து தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது உலகம் அறியும். தீவிரவாதத்தை ஒழிக்க அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.
இது ஒரு கோவில். புனிதத் தலம். இங்கு தீவிரவாதி நுழைந்ததே தவறு. பக்தர்களை, அப்பாவிகளைக் கொலைசெய்து மதக் கலவரத்தைத் தூண்ட முயற்சி நடக்கிறது. இது எத்தனை காலம் தொடரப் போகிறது?
இந்த விவகாரம் நாட்டின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட சவால். காஷ்மீரில் நடந்த தேர்தலை சகிக்க முடியாமல்இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
குஜராத் மக்களும் தேசிய மக்களும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். எக் காரணம் கொண்டும்சகோதரத்துவத்தை நாம் கொன்றுவிடக் கூடாது.
தீவிரவாதிகளை இந்தியா ஒடுக்கிக் காட்டும் என்றார்.
முன்னதாக விமான நிலைத்தில் நிருபர்களிடம் பேசிய வாஜ்பாய், உலகில் தீவிரவாதம் தனது கடைசி காலத்தைநெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்த தலிபான் இன்று இல்லை. அல்-கொய்தா ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறது. இதனால் தீவிரவாதிகள் அச்சத்தில் உள்ளனர். அவர்கள் புதிய பிரச்சனைகளை உருவாக்கமுயல்கிறார்கள்.
காஷ்மீரில் தேர்தல் நடக்கக் கூடாது என்று நினைத்தார்கள். ஆனால், தேர்தலை நடத்திக் காட்டி இருக்கிறோம்.அதை சகிக்க முடியாமல் தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. தீவிரவாதிகளை இந்தியா முறியடித்துக் காட்டும்என்றார்.
கோவில் பயணத்தை முடித்துக் கொண்டு தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் வாஜ்பாய்.
முன்னதாக மாலத்தீவில் பிரதமர் வாஜ்பாயை அந் நாட்டு அதிபர் முகம்மத் அப்துல் கயூம் மாலே விமானநிலையத்தில் வழியனுப்பி வைத்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications