பாண்டிச்சேரியில் பஸ்கள் மீது கல்வீச்சு
பாண்டிச்சேரி:
பாரத் பந்தையொட்டி பாண்டிச்சேரியில் சில விஷமிகள் கல்வீச்சு நடத்தினர். இதில் 10 அரசு பஸ்கள் சேதமடைந்தன.ஒரு டிரைவரின் மண்டை உடைந்தது.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ள "பாரத் பந்த்துக்கு" பாண்டிச்சேரியில் ஓரளவு ஆதரவுகிடைத்துள்ளது.
நேற்று இரவே பாண்டிச்சேரி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கானவர்களைக் கைதுசெய்து விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை பந்த் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.இதையடுத்து இரண்டு அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.
மாநிலம் முழுவதும் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கொண்டு வன்முறைச்சம்பவம் எதுவும் நிகழாத வண்ணம் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக பாண்டிச்சேரி கூடுதல் எஸ்.பி.ஆனந்த மோகன் நிருபர்களிடம் இன்று தெரிவித்தார்.
பந்த்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கல்வீச்சு காரணமாக அரசு பஸ் போக்குவரத்துமுழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தனியார் பஸ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பாண்டிச்சேரியில் உள்ள உள்ளூர் சந்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருகிறது.
கல்வீச்சிலும் கடைகளை அடைக்கச் சொல்லி கலாட்டாவிலும் ஈடுபட்ட பா.ஜ.க மாநிலத் தலைவரும் எம்.எல்.ஏவுமானகிருஷ்ணமூர்த்தியும் அவரது கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாண்டிச்சேரி நகராட்சி மார்க்கெட்டில்நுழைந்து கடைக்காரர்களை மிரட்டியபோது கைது செய்யப்பட்டனர்.
மேலும் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இந்து முன்னணியின் செயலாளர் செல்வம், சிவசேனைத் தலைவர் ராம் விஸ்வலிங்கம்ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வங்கியின் மீதும் பா.ஜ.கவினர் கல் வீசித் தாக்கினர். இதில் அதன் ஜன்னல்கள் உடைந்தன.
-->












Click it and Unblock the Notifications